இந்த வார தொடக்கத்தில், இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 370 வது பிரிவை திரும்பப் பெற்றது! இதை அடுத்து காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது! ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அமைக்கப் பட்டதை, லடாக் பகுதி மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இத்தகைய வரலாற்று நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இந்தியர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த நடவடிக்கையை வலியுறுத்தி தூண்டிய ஒருவரை உலகம் மறந்துவிட்டது. அது… தொலைக்காட்சி நட்சத்திரம் ராக்கி சாவந்த்தான்!
370 வது பிரிவு நீக்கப் படக் காரணமாக அமைந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, ராக்கி சாவந்த் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு செய்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார், இதனால் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பொருந்தக்கூடிய சட்டங்கள் இப்போது காஷ்மீருக்கு பொருந்தும். “காஷ்மீர் ஹமாரா ஹை.. உங்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன் மோடிஜி. நீங்கள் சிறந்தவர். மோடிஜிக்கு வெற்றி” என்று சாவந்த் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் படத்தில் தன்னை நடிக்க வைத்ததற்காக தனது தயாரிப்பாளர்-இயக்குனர் ‘தாரா 370’ படத்திற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார். பிரிவு 370 இன் சிக்கலை முதன்முதலில் எழுப்பிய படம் இது என்று அவர் பெருமிதம் கொள்கிறார். பின்னர் சாவந்த் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
ராக்கி சாவந்த், வரவிருக்கும் ‘தாரா 370’ படத்தில் பாகிஸ்தான் நடனக் கலைஞராக நடிக்கிறார், அங்கு அவர் காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார். அவர் முன்னர், பாகிஸ்தான் கொடிகளை தனது உடலில் போர்த்திக் கொண்டபடி உள்ள படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதற்காக, பாகிஸ்தானியர்கள் ராக்கி சாவந்தை வறுத்தெடுத்தனர். இது தான் வகிக்கும் ஒரு பாத்திரம் என்றும், இதற்காக அவர்கள் மூளையை சாகடித்துவிடக் கூடாது என்றும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
View this post on Instagram