ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

adhisankarar - 2026

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை. இந்த ஸ்தோத்திரம் உருவமற்ற பரம்பொருளை வெளிக்காட்டும் ஆறு பாடல்களால் ஆனது. ஞானத் தேடலும் ஆன்மீக வேட்கையும் கொண்ட ஒவ்வோர் உள்ளத்திலும் அதிர்வையும் சிலிர்ப்பையும் ஆனந்தத்தையும் அமைதியையும் இது அளிக்கும்.

நிர்வாண ஷட்கம்

மனோபு³த்³த்⁴யஹங்காரசித்தானி நாஹம்ʼ
ந ச ஶ்ரோத்ரஜிஹ்வே ந ச க்⁴ராணனேத்ரே |
ந ச வ்யோமபூ⁴மி꞉ ந தேஜோ ந வாயு꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 1||

நான் மனமும் அல்ல, புத்தி, அஹங்காரம் அல்லது சித்தமும் அல்ல, நான் காதுகளும் அல்ல, தோல், மூக்கு அல்லது கண்களும் அல்ல, நான் விண்வெளியும் அல்ல, பூமியும் அல்ல, நெருப்பு, நீர் அல்லது காற்றும் அல்ல, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

ந ச ப்ராணஸஞ்ஜ்ஞோ ந வை பஞ்சவாயு꞉
ந வா ஸப்ததா⁴துர்ன வா பஞ்சகோஶ ꞉ |
ந வாக் பாணிபாதௌ³ ந சோபஸ்த²பாயூ
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 2||

நான் பிராணனும் அல்ல, உடலின் ஐந்து வாயுக்களும் அல்ல, நான் உடலின் ஏழு தாதுக்களும் அல்ல, ஐந்து கோசங்களும் அல்ல, நான் பேச்சிற்கான உறுப்பும் அல்ல, கைகள், கால்கள், பிறப்புறுப்பு அல்லது குதமும் அல்ல, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்.

ந மே த்³வேஷராகௌ³ ந மே லோப⁴மோஹௌ
மதோ³ நைவ மே நைவ மாத்ஸர்யபா⁴வ꞉ |
ந த⁴ர்மோ ந சார்தோ² ந காமோ ந மோக்ஷ꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 3||

என்னுள் வெறுப்பும் விருப்பும் இல்லை, பேராசையும் மதிமயக்கமும் இல்லை, எனக்குள் பெருமை, கர்வம் அல்லது பொறாமை இல்லை, எனக்கு கடமை இல்லை, செல்வம், காமம் அல்லது விடுதலைக்கான ஆசையும் இல்லை, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ந புண்யம்ʼ ந பாபம்ʼ ந ஸௌக்²யம்ʼ ந து³꞉க²ம்ʼ
ந மந்த்ரோ ந தீர்த²ம்ʼ ந வேதா³ ந யஜ்ஞா꞉ |
அஹம்ʼ போ⁴ஜனம்ʼ நைவ போ⁴ஜ்யம்ʼ ந போ⁴க்தா
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 4||

எனக்கு நல்வினை தீவினை இல்லை, இன்பம் இல்லை துன்பம் இல்லை, எனக்கு தேவை மந்திரங்கள் இல்லை, யாத்திரைகள் இல்லை, வேதங்களும் சடங்குகளும் இல்லை, நான் அனுபவமோ அனுபவிக்கப்பட்டதோ அல்லது அனுபவித்தவனோ அல்ல, நான் விழிப்புணர்வு, பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்!

ந மே ம்ருʼத்யுஶங்கா ந மே ஜாதிபே⁴த³꞉
பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம |
ந ப³ந்து⁴ர்ன மித்ரம்ʼ கு³ருர்னைவ ஶிஷ்ய꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 5||

எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை, சாதி பேதம் இல்லை, எனக்கு தந்தையும் இல்லை, தாயும் இல்லை, ஏனென்றால் நான் பிறந்ததுமில்லை, நான் உறவினனோ, நண்பனோ, ஆசிரியனோ அல்லது சீடனோ இல்லை, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்!

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

அஹம்ʼ நிர்விகல்போ நிராகாரரூபோ
விபு⁴ர்வ்யாப்ய ஸர்வத்ர ஸர்வேந்த்³ரியாணாம் |
ந சாஸங்க³தம்ʼ நைவ முக்திர்ன ப³ந்த⁴꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 6||

நான் இருமை இல்லாதவன், என் வடிவம் உருவமற்றது, நான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன், எல்லா புலன்களிலும் பரவியிருக்கிறேன், நான் பற்றுள்ளவனில்லை, சுதந்திரமாகவோ சிறை பிடிக்கப் பட்டவனாகவோ இல்லை, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories