ஏப்ரல் 22, 2021, 7:24 காலை வியாழக்கிழமை
More

  திராவிட மிரட்டல் அராஜகம்..! அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்!

  கரூரில் பணம் கைப்பற்றப்பட்ட போது அந்த பணம் செந்தில் பாலாஜி பணம் என கூப்பாடு போட்டு சி பி ஐ விசாரணை வேண்டும் என்றார்

  கரூர் செந்தில் பாலாஜி

  “ஸ்டாலின் 11 மணிக்கு முதல்வரானால் 11:05 மணிக்கு நீங்கள் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளலாம். எந்த அதிகாரியும் தடுக்க முடியாது. தடுத்தால் அந்த அதிகாரி வேலையில் இருக்க முடியாது”
  – செந்தில் பாலாஜி, கரூர் தொகுதி திமுக வேட்பாளர்

  இன்று செந்தில் பாலாஜி கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் காணொளி காட்சியை கண்டு அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தேன் !

  கட்சி எல்லைகளை தாண்டி அது ஒரு முன்னாள் அமைச்சர் 2011 முதல் 2016 வரை அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் ! அவர் இப்போது திமுகவில் கரூரில் எம் எல் ஏ சீட்டுக்காக போட்டியிடுகிறார் !

  அவர் சொல்கிறார் ஸ்டாலின் 11 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்றதும் 11 .05 க்கு மாட்டுவண்டியை எடுத்துக்கொண்டு நேராக போய் அமராவதி ஆற்று படுகையில் மணல் அள்ளலாமாம் ! எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார்களமாம் ! தடுத்தால் இவருக்கு போன் செய்தால் அந்த அதிகாரி அங்கு இருக்க மாட்டாராம் ! இவர் எல்லாம் மக்கள் தொண்டரா? சமூக விரோதியா ?

  என்ன ஆணவம் திமிரான பேச்சு இது ! இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு முன்னோட்டமா இப்பேச்சு ? i திமுக அதிமுக இரு கட்சியினரும் பெரும் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி என்று சொல்லாமல் சொல்கிறார் ! இவர் அதிமுகவில் இதே மாதிரி தான் இருந்திருப்பார் ! ஆனால் இவ்வாறு வெளிப்படையாக ஜெயலலிதாவிடம் இருந்தபோது பேசி இருந்தால் அவர் அடுத்த நாளில் காணாமல் போயிருப்பார் !

  இப்போது அவரை அடக்குவாரில்லை ! அவர் பணமும் தேவைப்படுகிறது ! இவரை தான் ஸ்டாலின் போன 2016 தேர்தலில் அன்புநாதன் என்பவர் வீட்டில் கோடி கோடி யாக கரூரில் பணம் கைப்பற்றப்பட்ட போது அந்த பணம் செந்தில் பாலாஜி பணம் என கூப்பாடு போட்டு சி பி ஐ விசாரணை வேண்டும் என்றார் ! இப்போது எல்லாம் சரியாகிவிட்டது ! யாருக்கும் வெட்கமில்லை !

  • சமூக வலைத்தள வைரல் பகிர்வு

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »