December 5, 2025, 4:30 PM
27.9 C
Chennai

அபகரிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்கும் மசோதா இது!

amitsha in parliament - 2025

அபகரிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்கும் (வக்பு வாரிய திருத்த மசோதா) விடுதலை திருநாள் இன்று!

மதசார்பின்மை என்ற பெயரில், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைத்த காங்கிரஸின் நரி தந்திரத்திற்கு முடிவு கட்டப்படும் நாள் இன்று !!

வக்ஃபு மசோதா என்ற பெயரில், சாமானிய மக்களின் உரிமைகளையும் உடைமைகளையும் பிடுங்கும் அதிகாரத்தை, 

ஒரு குறிப்பிட்ட வாரியத்துக்கு கொடுத்து, மத நல்லிணக்கத்திற்கு பெரும் சீர்கேடு விளைவிக்க நினைத்தது முந்தைய காங்கிரஸ் அரசு !!

நினைத்த மாத்திரத்தில் நிலங்களை உரிமை கோரும் அதிகாரம் வக்ப்பு வாரியத்துக்கு வழங்கப்பட்டது பல துஷ்பிரயோகங்களுக்கு வழி வகுத்தது !!

ஆன்மீகத்தில் இந்தியாவுக்கே முன்னோடியாக இருக்கும் தமிழகத்திலேயே பல கோவில்கள் இருக்கும் நிலங்களை வக்ஃபு வாரியம் உரிமை கோரியது  !!

அந்த ஆக்டோபஸ் கரங்களில் சிக்காத நிலமே இல்லையா என்று பீதி அடையும் அளவுக்கு, கட்டுப்பாடற்ற சீர்கேடுகளை நிகழ்த்தியிருந்தது முந்தைய UPA  அரசு!!

இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு முன்பே எழுந்தருளிய கோவிலையும், அந்தக் கோவில் இருக்கும் ஒட்டுமொத்த திருச்செந்துறை கிராமத்தையுமே வக்ஃபு நிலம் என்று உரிமை கோரியது அக்ரமத்தின் உச்சம்.

அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரம் குன்றம் மலையையே அபகரிக்க முயன்ற சதி திட்டம், மக்கள் பேரெழுச்சியோடு தடுத்து நிறுத்தப்பட்டதும் சமீபத்திய நிகழ்வு !!

தமிழகத்தில் மட்டுமா இது நடக்கிறது ?

மத்திய பிரதேசத்தின் மக்கனி கிராமத்தில், பெரும்பான்மையாக இந்து சமுதாயத்தினரே வாழ்ந்து வந்த போதும்….

ஒரு சிவலிங்கம் அமைந்திருக்கும் இடம் முதற்கொண்டு, ஒட்டுமொத்த கிராமத்தையும் உரிமை கோரியது வக்பு வாரியம் !!

அந்த நிலங்களை தானமாக கொடுத்ததாக கூறப்படும் காதிர் கான் என்பவர் அந்த கிராமத்திலேயே வாழ்ந்ததில்லை என்ற தெரிந்த பிறகும் அந்த பிரச்சனையை  வக்பு வாரியம் விடவில்லை !

கர்நாடகாவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா நடந்து வந்த நிலையில், அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது இல்லை என்றும், 

வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான நிலம் என்றும் உரிமைக் கோரிய வாரியம் …., அதற்கு எதிராக நீண்ட  சட்டப் போராட்டம் நடந்ததும் வரலாறு…

அயோத்தியா ராமர் கோவில் பற்றி அறிந்தவர்களுக்கு, லக்னோவின் லட்சுமணன் கோவில் பற்றி அறிய வாய்ப்பில்லை !!

லட்சுமணன் கட்டிய கோவிலாக நம்பப்படும் இடத்தையே, வக்ஃபு வாரியம் உரிமை கோரி சட்டப் போராட்டம் நடத்துகிறது !!

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகாவிலேயே, எட்டு தீவுகளை உரிமை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் பிரச்சனை வெடித்ததும் நாம் மறந்து விட முடியாது !!

கோவில் நிலங்கள் மட்டுமா இப்படி ஸ்வாகா செய்ய வக்பு வாரியம் நடத்துகிறது. ?

ஒடுக்கப்பட்ட மக்களும் ஏழை விவசாயிகளின் நிலத்தையும் வக்பு வாரியம் விட்டு வைக்கவில்லை !!

தமிழ்நாட்டில், சத்தியமங்கலத்தில் அருந்ததியர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தையும் இந்த வாரியம் உரிமை கோரியது !!

40 ஆண்டுகளாக அந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு, அந்த நிலம் சொந்தமில்லை என்று கூறுவது எவ்வளவு பெரிய சமூக அநீதி… மற்றும் சூறையாடல் ?

ராணிப்பேட்டையில் 50 ஏக்கர் விவசாய நிலத்தை ஏழை விவசாயிகளிடமிருந்து அபகரித்து இந்த வாரியத்திடம் ஒப்படைத் த காங்.. திமுக கூட்டணியின் விவசாய விரோத அரசியலை நாம் மறந்துவிட முடியுமா ?

கேட்பாரற்று கிடக்கும் கோவில்களும் சாதாரண மனிதர்களும் மட்டும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைத்தால் அதுவும் முட்டாள்தனமானது….

அரசாங்கமே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு நில உரிமைகளை வக்பு வாரியம்  கோரியது  எவ்வளவு பேருக்கு தெரியும்  !!

சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் தலைமை அலுவலக நிலைத்தையே வக்ஃபு நிலமாக உரிமை கோரினார்கள் !

பாராளுமன்ற கட்டிடமே வக்ஃபு நிலம் என்று தைரியமாக சொல்லி பார்த்தார்கள் !!

கோலாப்பூரில் மகாதேவரின் ஆலயத்தின் அருகில் இருக்கும் நிலத்தையும் அபகரிக்க முயன்றார்கள் !!

எல்லாவற்றையும் விட 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்த மகா கும்பமேளா நடக்கும் இடத்தையும் வக்ஃபு நிலம் என்று உரிமை கோர பார்த்தார்கள் !!

வக்ஃபு வாரியார் திருத்த மசோதா என்பது, எவரின் உரிமையையும் பறிப்பதற்காக இல்லை !!

மாறாக இந்து கோவில்கள் மற்றும் சாதாரண மக்களின் உரிமையை பறிக்கும் காங்கிரஸ் அரசு போட்ட முந்தைய சட்டத்திற்கு ஒரு கடிவாளம் இட்டு சீர்திருத்தம் செய்யும் மசோதா !

பல நூற்றாண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்கும் மசோதா !!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” பாதையில்…

அனைத்து சமூகத்தினருக்கும் மாபெரும் பயன் அளிக்கக்கூடிய இந்த சீர்திருத்த மசோதாவை மனப்பூர்வமாக நாம் அனைவரும் ஏற்போம்…வரவேற்போம் !

எஸ். ஆர். சேகர்.
(மாநில பொருளாளர், தமிழக பாஜக.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories