December 5, 2025, 12:34 PM
26.9 C
Chennai

நவயுக பாரதத்தின் பரகாலனுக்கு பவள விழா இன்று!

modiji 75th birthday wishes - 2025

நவயுக பாரதத்தின் பரகாலனுக்கு பவள விழா இன்று.

இந்த மண்ணிற்கு என தனித்த பெருமை இல்லை, மண்ணில் தோண்றிய ” மக்களாலயே ” அந்த மண்ணிற்கு பெருமை.

அப்படி பல புண்ணியசீலர்களையும்… பல தவச்சீலர்களையும் பெற்று அதன் சுகந்தங்களையும், உன்னதங்களையும் பரப்பி பெருமை கொண்டது நமது பாரத தேசம்.

நூறு இளைஞர்களை கொடுங்கள் நான் இந்தியாவை மாற்றிக்காட்டுகிறேன் என பேசிய ஓர் நரேந்திரன் வாழ்ந்த ( விவேகாநந்தர் ) காலத்தில் நாம் இல்லாது போனோமே என்ற ஏக்கம் நம்மில் பலருக்கு உண்டு.

அது….
இந்த நரேந்திரர் வாழும் காலத்தில்., நாமும் வாழும் பெரும் பாக்கியம் பெற்றோமே என்று தாராளமாக சிலாகித்து கொள்ளலாம்….

பாரதத்தின் பிரதமராய் திரு நரேந்திர தமோதரதாஸ் மோடி அவர் தம் பதவி காலத்தில் அதிக நாட்கள் இப்பதவியை வகித்து வரும் இரண்டாவது பிரதமராக அவரது இந்த 75 வது வயதில் பூர்த்தி செய்கிறார்.

முதல் இடத்தில் பாரதத்தின் முதல் பிரதமர் வருகிறார். வரும் காலங்களில் இவர் அந்த இடத்திற்கு முன்னேற கூடும். அது ஒன்றும் இவருக்கு பெருமை அல்ல…

ஆனால்……
அவரது இந்த ஆட்சி காலத்தில் நாடு பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது என்பதே பெரும் சாதனை. உலக அளவில் வளர்ந்து வரும் இளம் பொருளாதார வளர்ச்சி என்பதும்…… படுவேகமாக, சீராக வளர்ச்சி விகிதம் கொண்டு இருக்கும் நாடாக….. உலகின் நான்காவது இடத்தில் உள்ள நாடாக வளர்ச்சி கண்டு வருகிறது நம் இந்திய தேசம்.

இவையெல்லாம் ஒரே நாளில், ஒற்றை அதிகார சாளரத்தின் கீழ் வந்துவிட வில்லை….. மாறாக இவரது நிர்வாகத்தின் கீழ் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது இவரது நிர்வாகத்திற்கு ஓர் உன்னத சான்று‌.

என்ன வித்தியாசம்…!!?!?!

உதாரணத்திற்கு சீனாவில் கம்யூனிச சித்தாந்தத்தின் கீழ் மாவோ கொண்டு வந்ததை சற்றேறக்குறைய ஐம்பது ஆண்டுகள் கழித்து வந்த ஷி ஜிங் பிங் கிட்டத்தட்ட ராணுவ கட்டுப்பாட்டோடு கடந்த இருபது ஆண்டுகளாக வழி நடத்தப்பட்டு …, இன்று உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக அசூர வளர்ச்சி கண்டு நிற்கிறார்கள்.

இன்னமும் சரியாக சொல்வதென்றால்…..
கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலக பொருளாதார பங்களிப்பில் சீனாவின் பங்கு சுமார் 26.75% ஆகும். இன்று அது மீண்டும் 17.56% எனும் அளவுக்கு முன்னேற்றம் கண்டு நிற்கிறது.

அதே காலகட்டத்தில் நம் இந்திய தேச பங்களிப்பு என்பது சுமார் 22.84% ஆகும்.

ஆனால் இன்று வெறும் ஒற்றை இலக்க எண்ணாக சுமார் நான்கு சதவீதம் மட்டுமே உள்ளது. இதுவே சுதந்திர இந்தியாவின் உச்சம் கண்ட வளர்ச்சி தற்சமயம் மட்டுமே என்கிறது ஓர் புள்ளி விபர அட்டவணை.

ஒருவேளை இரட்டை இலக்க எண்ணை கடந்தால்……?!?!!

அதற்கு உண்டான அத்தனை சாத்தியக்கூறுகளும் இவரது நிர்வாகத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது தான் தற்போதைய பாரதத்தின் நம் பிரதமரின் பகீரத பிரயத்தன முயற்சி.

இது அத்தனையும் உலகின் மிகப்பெரிய பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் ராணுவ அதிகாரத்துடன் கூடிய அடக்குமுறை கீழ் ஏற்படுத்தப்படவில்லை என்பதே பெரும் சவாலான சமாச்சாரம் தான்.

வாக்கு வங்கி அரசியலை முன்னெடுத்து வரும் தற்போதைய நம் சமகால உலக அரசியல் தளத்தில்…. இவரது முத்தாய்ப்பான சில முன்னெடுப்புகள் பலரை கதிகலங்க செய்திருக்கிறது.
பலரும் யோசனையில் கூட தொடத்தயங்கும் மதம் சார்ந்த அரசியலை… நாட்டின் நலன் சார்ந்த, பணம் சார்ந்த விஷயங்களை அநாயாசமாக கையாண்டு வருகிறார் இவர்.

இந்த இடத்தில் தான் இவர் மற்றவர்களிடம் இருந்து மாறுபடுகிறார்.

இது போருக்கான யுகம் கிடையாது என பிரகடனம் செய்தவர்… பொருளாதார உலக வணிக, வர்த்தக கட்டமைப்பை #ஹலால் என்கிற பெயரில் கண்ணுக்கு புலப்படாத மடைமாற்றம் செய்யப்பட்டு வந்ததை ஜஸ்ட் லைக் தட் கையாண்டது உலக பொருளாதார வல்லுனர்களையே பதைபதைக்க செய்தது. இது குறித்து நம்மில் பலருக்குமே மிகப் பெரிய அவதானிப்பு எல்லாம் இல்லை…. என்ன செய்ய….?!!!

இன்றைய உலகின் அமெரிக்க வல்லாதிக்க பணப்பரிமாற்ற வர்த்தகத்தை டாலரில் நடக்க இரண்டு விஷயங்கள் பிரதான பங்கு வகிக்கிறது. ஒன்று உலக போரின் போதான தங்கத்தின் மீதான அமெரிக்க ஆதிக்கம் .
அடுத்ததாக அறுபதுகளில் அவற்றை அப்படியே திரவ தங்கத்தின் மீது கொண்டு வந்து நிலை நிறுத்தியது.

இந்த இடத்தில் தான் அரபு உலக தேசம்….. அல்லது அவர்கள் பெயரில் மதம் சார்ந்து அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஹலால் முறையில் வர்த்தக மடைமாற்றம் செய்ய…… ஒரு பெரும் சுழற்சியில் உலக வணிக நிதி ஆதாரங்கள் சிக்க நேர்ந்தது. இதன் ஊற்றுக்கண்ணாக நம் இந்திய தேசம் நிறம் மாற ஆரம்பித்த வேளையில் ஆபத்பாந்தவனாக இவரது தலைமையின் கீழ் ஆட்சி மலர்ந்தது.

இது இன்று டாலரையே பதம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

நாளைய உலக வர்த்தகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்திருக்கும் ஆகச் சிறந்த நடவடிக்கை இது. இவற்றை சத்தமில்லாமல் சாத்தியப்படுத்தியதே இவரது சாமர்த்தியம். நாளைய நம் சாம்ராஜ்யத்தின் முதல் கட்டுமான நடவடிக்கை இது.

இதனை அவர் டிமானட்டைஷேசன் மூலம் கொண்டு வந்த சமயத்தில்…. இன்றும் கூட பலருக்கும் அது புரியாத புதிர் தான். முள்ளை முள்ளால் எடுத்து இருக்கிறார்.
இந்தியாவில் இப்படி செய்த முதல் நபர் இவரல்ல… பிரதமராக இந்திரா காந்தி இருந்த சமயத்தில் அவரும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது அறிவித்தது நடந்தது… அமெரிக்க டாலருக்கு நிகரான நம் இந்திய ரூபாயின் மதிப்பை குறைக்கும் நடவடிக்கையாக அது அமைந்தது. ஆனால் இவரது நடவடிக்கை அதற்கு நேர் மாறானது.

இந்திய பொருளாதார வர்த்தக கட்டுமானத்தை ஓர் வரன்முறை கீழ் கொண்டு வந்து ஸ்திரத்தன்மை படுத்தினார். அதாவது அது அத்தனையும் கணக்கில் கொண்டு வந்து இருக்கிறார். இன்றைய தேதியில் அமெரிக்காவில் கூட இது சாத்தியமே இல்லை. எவ்விதம் எனில் அமெரிக்க டாலர் எனும் அச்சிடப்பட்ட தாளுக்கு நிகர மதிப்பு என்று ஏதும் கிடையாது என அமெரிக்க அரசாங்கமே வெளிப்படையாக அறிவித்துவிட்டது. அந்த அளவுக்கு சகட்டு மேனிக்கு அமெரிக்க டாலர்களை அச்சடித்து வெளியிட்டு இருக்கிறார்கள். போதாக்குறைக்கு நாற்பது ட்ரில்லியன் டாலர்களை கடனாக கொண்டுள்ள நாடு தான் இன்றைய அமெரிக்கா.

வல்லரசு பட்டம் வெறும் காலி பெருங்காய டப்பா மாத்திரமே அது.

250 ஆண்டு கால பெருமை முடிவுக்கு வர இருக்கிறது.

இது டிரம்ப் கொண்டு வந்த நிதி சீர்திருத்த நடவடிக்கைகளால் அல்ல…. அது போலவே அவரது வரிவிதிப்பு நடவடிக்கைகள் அவர்களின் நீதிமன்றகளால் பகடி செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு இறுதிக்குள் பலவும் ரத்து செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஃது பெரும் நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் உலக வர்த்தக வல்லுனர்கள்.

மறு மார்க்கத்தில் நம் இந்திய தேசம் சீரான வர்த்தக வளர்ச்சியை கொண்டு இருக்கிறது.

அப்படி என்றால்……..

இந்த இடத்தில் நாளைய உலகின் போக்கை அவதானிக்க முடிந்தவர்கள் பாக்கியவான்களே…..

இப்படியும் சொல்லலாம்…,
நம் பாரம்பரிய ஜோதிட சாஸ்திரத்தை கொண்டு…. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தவறான காலத்தில் அவர் அப்பதவிக்கு வந்திருப்பதாக கணித்து வைத்திருந்தார்கள். சிம்ம ராசியில் வரும் அவருக்கு இது போதாத காலம் அஷ்டம சனி…. போதாக்குறைக்கு பன்னிரெண்டில் உச்ச குரு வர இருக்கிறது. அடுத்ததாக ஜென்ம குரு. இரண்டரை ஆண்டுகள் “”வச்சி செய்ய இருக்கிறது “……

நம் பிரதமருக்கு விருச்சிக அனுஷம்
அதாவது அவருடைய நட்சத்திர பிறந்த நாள் பத்து நாட்கள் கழித்து தான்.இன்று தேதி பிரகாரம்.

நம் தேசத்தை காக்கும் கோமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்வாங்கு வாழிய நீர் எம்மான்…….

ஜோதிடத்தில் ஸ்தானபலம் என்று ஒன்று உண்டு…. அவரது ஜனன கால ஜாதகம் வேறு என்பவர்களும் உண்டு.
ஆன போதிலும் நம் நாட்டை ஆள்பவர் நீண்ட ஆயுளோடு தேக ஆரோக்கியத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துவதும் பிரார்த்திப்பது நமது கடமை.

தற்சமயம் அவர் தம் உச்ச காலத்தில் வாழ்வதாக அவரது ஜாதக அமைப்பு சொல்வதாக பலரும் கணித்து வைத்திருந்தார்கள்….. அது போலவே நம் இந்திய தேசமும் உலக அளவில் மிகப்பெரிய இடத்திற்கு நகரக் கூடிய காலக்கட்டத்தில் இருப்பதாகவே பலரும் அவதானித்து இருக்கிறார்கள்
இன்னல்களை எதிர்கொண்டு மிகப்பெரிய உச்சத்தை அவர் அடையக்கூடும் என்பது காலக் கணக்கு. அதற்குண்டான வீர்யம் நம் வாழ்த்தொலிகளால்……. பிரார்த்தனைகளால் ……. நிரம்பிடட்டும்.

விஸ்வ குரு எனக்கொண்டாடப்படும் அவரை …. அவரது ஜனன கால ஜாதகத்தில் உச்சம் பெற்ற குரு பார்க்க இருக்கிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பது ஜோதிட கணக்கு…… அந்த வகையிலும் பல ஏற்றங்களை சந்தித்து இந்த புண்ணிய பூமியில் சிரஞ்சீவியாய் என்றென்றும் நிலைத்து நிற்க.. வாழ்வாங்கு வாழ அந்த ரகு குல வம்சம்….. இஷ்வாகு குல தனம் ஸ்ரீரங்கத்து எம்பெருமான் கடாக்ஷித்து அருள் புரியட்டும்.

💗 ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories