போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

Published:

reserve bank of india rbi - 2026
#image_title
  • சக்கரவர்த்தி மாரியப்பன்

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

நமது அந்நியச் செலாவணி கையிருப்பு இன்னும் 11 மாதங்கள் வரை தாங்கும் அளவுக்கு பலமாக உள்ளது. இரண்டாவதாக சிறப்பாக நிதி நிர்வாகம் செய்யக்கூடிய வங்கிக் கட்டமைப்பு தற்காலிக சந்தை அபாயங்களைத் தாங்கிக் கொள்ள உதவும். – உலக வங்கி.

பெட்ரோலியப் பொருள்கள் தட்டுப்பாடு விலையேற்றம் நிச்சயம் நம்மை பாதித்தாலும், மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

● பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்புக் கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்துள்ளது. தற்போது டீசலுக்கு கூடுதல் சுங்க வரி கிடையாது. பெட்ரோலுக்கு ரூ.3 (முன்பு ரூ.13).

இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதில் உத்தேசமாக 15 நாள்களுக்கு ரூ.7000 கோடி வருமான இழப்பு ஏற்படும்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

● ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருள்களுக்கு சுங்க வரியை உயர்த்தியுள்ளது. டீசல் – லிட்டருக்கு ரூ.21.50, விமான எரிபொருள் ATF – லிட்டருக்கு ரூ.29.5. இதன் மூலம் ரூ.1500 கோடி வருவாய் கிடைக்கும்.

● இவை தவிர ஜூன் 30 வரை, 40 பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்துள்ளது. இவை பிளாஸ்டிக், பெட்ரோகெமிக்கல், ஜவுளி, பேக்கேஜிங், மருந்து, ரசாயனம் மற்றும் வாகன உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.

● மேலும் ஏற்றுமதியாளர்களுக்கு பயணத்தில் உள்ள ரிஸ்க், ஏற்படும் கூடுதல் காப்பீடு செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு துறைமுகங்களில் வாடகை, குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்ணர்கள் கட்டணம் போன்றவற்றில் சலுகை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

● வீடுதோறும் குழாய் வழி எரிவாயு இணைப்புகளைப் பயன்படுத்த புதிய இலக்குகள் நிர்ணியிக்கப்பட்டு வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

● வருங்காலத்தில் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் இலக்கான 500 GW ஐ நோக்கி நாம் நகர்ந்து கொண்டு இருக்கிறோம். தற்போது 280 GW இலக்கை அடைந்து உலகின் புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் சக்தியில் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகிறோம்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

● பாதுகாப்பான Small Modular Reactors, Fast Breeder Reactors கொண்ட அணுவுலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரிக்கும் போது நமது இறக்குமதி கணிசமாகக் குறையும். பார்க்கலாம்.

Related articles

Recent articles

spot_img