செய்வதற்கு நிறைய வேலைகள் உண்டு அதை கவனிக்க நேரம் வேண்டும்: சேகர் கபூருக்கு பதில் கொடுத்த ஏஆர் ரகுமான்!

சினி நியூஸ் சினிமா
448aeec373af87e4d0a723b812394ca8 - 2026

தனது ட்விட் பதிவில், “பாலிவுட்டை கையாளக்கூடியதை விட உங்களிடம் அதிக திறமை இருக்கிறது என்பதை இந்த விவகாரம் நிரூபிக்கிறது.”

“இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம். ஆனால், நேரத்தை மட்டும் மீட்க முடியாது” என பாலிவுட் நட்சத்திரம் சேகர் கபூருக்கு இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

பாலிவுட் திரையுலகில் நிறைய பேருக்கு வாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அண்மையில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் வரிசையாக பலரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுவங்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ரகுமான் அதேபோல் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை குறித்து அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை நேரடியாகவே தெரிவித்து உள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பெச்சாராவுக்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் ரேடியோ மிர்ச்சிக்கு இப்படம் தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “பாலிவுட் திரைப்படங்களுக்கு ஏன் அதிக இசையமைக்கவில்லை?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், “நான் நல்ல திரைப்படங்களை வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் ஒரு கும்பல் எனக்கு எதிராக பாலிவுட்டில் இயங்குகிறது.” என வெளிப்படையாக கூறி அதிர வைத்தார்.

இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாலிவுட் கலைஞர் சேகர் கபூர் டிவிட் போட்டிருந்தார். அவர் தனது ட்விட் பதிவில், “பாலிவுட்டை கையாளக்கூடியதை விட உங்களிடம் அதிக திறமை இருக்கிறது என்பதை இந்த விவகாரம் நிரூபிக்கிறது.” என கூறியிருந்தார்.

இந்நிலையில் , “இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம். ஆனால், நேரத்தை மட்டும் மீட்க முடியாது. செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளன. அமைதியாக கடந்து செல்வோம்.” என சேகர் கபூரின் டிவிட்டிற்கு ரஹ்மான் பதில் அளித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ள பிரபல இசையமைப்ளர் ஏ.ஆர் ரஹ்மானின் கருத்து இந்திய சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.