விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி ஏன்? தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்

சினி நியூஸ் சினிமா

vijay actor - 2026
மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற அறிவிப்பையும், மார்ச் 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் இல்லை என்ற அறிவிப்பையும் விடுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படம் உள்பட மூன்று படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதியை அளித்துள்ளது. இதனால் இந்த மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த சிறப்பு அனுமதி ஏன் என்று தயாரிப்பாளர் சங்கம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

`ஸ்டிரைக் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறும்போதே, தேவைப்படும் பட்சத்தில் படத் தயாரிப்புக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாள்கள் பெர்மிஷன் கொடுக்கலாம் என்று முன்னரே முடிவு செய்திருந்தோம்.

அதனடிப்படையில் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை இரண்டு நாள்கள் நடத்துவதற்கு சன் பிக்சர்ஸ் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அதேபோல சமுத்திரக்கனியும் 23, 24 ஆகிய இரு தேதிகளில் சூட்டிங் நடத்திக்கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பிருந்திருந்தார். மேற்கூறியவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, மேலும் ஒரு சில நிறுவனங்களும் ஒரு சில நாள்கள் சூட்டிங் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டதுபோல தவறான கருத்துகளைப் பரப்பவேண்டாம்’

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.