இன்னமும் இழுபறியில் தேமுதிக.,! இந்த வாய்ப்பும் போனால்.. மூன்றாவது அணிதான்!

vijayakanth piyush goyal - 2026

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக., தலைமயிலான கூட்டணியில் இடங்கள் தொடர்பாக தேமுதிக முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக., கட்சி தலைமை அலுவலகத்தில் சுதீஷ் தலைமையில் ஆலோசனை நடத்தப் பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகளை தேமுதிக கேட்பதால், இழுபறி நிலை நீடிப்பதாகக் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி, கடலூர் தொகுதிகளை தேமுதிகவிற்கு கொடுக்க பாஜக வலியுறுத்துவதால் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த முறை தே.ஜ.கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டபோது அதிக தொகுதிகளில் நின்றதையும் தற்போது 10க்கும் குறையாமல் பெற வேண்டும் என்றும் பேச்சு நீடிக்கிறது. ஆனால், கடந்த முறை விஜயகாந்த் உடன் இருந்த பலர் இப்போது இல்லை என்பதும், கட்சி கரைந்து போய், விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதருக்கான செல்வாக்கை வைத்து உள்ளது என்றும் கூறப் படுகிறது.

ஆயினும், பாமக., பெற்ற தொகுதிகளைக் காட்டிலும் குறைவாகப் பெற தேமுதிக சம்மதம் தெரிவிக்கவில்லை. அடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் தொகுதியும் ஒன்று கேட்டிருந்தது என்றும் அது பாமக.,வுக்கு அளிக்கப் பட்டதால், தேமுதிக தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாற்பது தொகுதிகளில் தற்போது வரை பாஜக., பாமகவுக்கும் உதிரிக் கட்சிகளுக்கும் என 15 தொகுதிகள் சென்றாலும் 5 தொகுதிகள் மட்டுமே தேமுதிக.,வுக்கு ஒதுக்கும் நிலையில் அதிமுக., தரப்பு உள்ளது. அதிமுக., கடந்த முறை 37 தொகுதிகளில் வென்றது. தற்போது கூட்டணி என்பதால் பாதி இடங்களைக் குறைத்துக் கொண்டு, குறைந்த பட்சம் 20 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக., உள்ளது.

அதேபோல், திமுக., கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. எனில், திமுக.,வும் 20க்குக் குறையாமல் போட்டியிட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. மதிமுக., விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றுக்கும் மீதமுள்ள தொகுதிகளில் ஒதுக்கியாக வேண்டும்.

ஏற்கெனவே திமுக., கூட்டணியில் பாமக.,வுக்கு 5 இடங்கள் வரை கொடுப்பதாகவும், அதனாலேயே காஞ்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடியாது என்றும் திமுக., கூறி வந்தது. அதன்படியே பாமக.,வுக்கு ஒதுக்கி வைத்திருந்த தொகுதிகள் எல்லாம் இப்போது காங்கிரஸுக்கு அளிக்க திமுக., முன் வந்துள்ளது. எனவே தேமுதிகவுக்கு திமுக., கூட்டணியில் இடம் அமையாது என்பதும், அது கேட்கும் தொகுதிகள் கிடைக்காது என்பதும் வெளிப்படையாகக் கூறப்பபடும் தகவல்கள்!

எனவே தேமுதிக,.வுக்கு  அடுத்த வாய்ப்பாக, மூன்றாவது அணிதான் முன்நிற்கும்! அதனை ஏற்கெனவே சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியால் சூடுபட்ட விஜயகாந்த் இப்போது அதை விரும்புவாரா என்பது சந்தேகமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories