பாஜக ஆட்சியும்; குற்றம் கடிதலும்!

உரத்த சிந்தனை கட்டுரைகள்

கடந்த சில ஆண்டுகளில் குற்றங்கள் அதிகளவில் நடந்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக குறிப்புகள் தெரிவிக்கின்றன. அது சரியே.

நடைபெறுகிற குற்றங்கள் இது நாள் வரை புகார் தெரிவிக்க, வெளியிட, பதிவிட, விசாரணை செய்ய முடியாத நிலை மாறி, பொது மக்கள் தைரியமாக குற்ற செயல்களை புகார் செய்து, பதிந்து, விசாரணை செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த கடந்த சில ஆண்டுகளாக உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு சீர்திருத்தங்களே காரணம்.

இதே நேரத்தில் குற்றங்களை புலனாய்வு செய்து அதிகமான வழக்குகளை பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியதும் கடந்த சில வருடங்களில் பாஜக ஆட்சியில் தான் என்பதை சொல்ல மறுக்கின்றன ஊடகங்கள்.

அதிக அளவிலான கள்ள நோட்டுக்கள், போதை பொருட்கள், ஆயுதங்கள் போன்றவைகளும் கண்டுபிடிக்கப்பட்டது இந்த ஆட்சியில் தான்.

குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது பாஜக ஆட்சி தான் என்பது கண்கூடு. கடந்த 2 வருடங்களில் உள்துறை அமைச்சகத்தின் ‘ஆபரேஷன் ஸ்மைல்’ (Operation Smile) திட்டத்தின் மூலம் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 70,000 காணாமல் போன குழந்தைகளை மீட்டெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாராயணன் திருப்பதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.