health tips - 2026

அப்பாச்சி தீர்வு: பச்சிளம் குழந்தைகள் நலம்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

குழந்தைச்சளி

நெஞ்சில் சளி பிடித்தால் குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படும். அந்த சமயங்களில் ஜாதிக்காயை உரைத்து குழம்பாக்கி அதை குழந்தைகளின் நெஞ்சில் பற்றாகப் போட்டால் சளி உடைந்து வெளியேறிவிடும்.

குழந்தை இருமல்

துளசி இலையின் சாற்றுடன் வெற்றிலைச் சாறையும், தேனையும் சம அளவில் கலக்கி தினமும் மூன்றுவேளை ஒரு சங்கு அளவு குழந்தைகளுக்குப் புகட்டிட இருமல் நோய் மறைந்துவிடும்.

குழந்தைகள் மாந்தம்

சித்தரத்தையை எடுத்து அதள் மேல் விளக்கெண்ணையை நன்றாகத்தடவி நெருப்பு உஷ்ணத்தில் கருகும்படியாக சுட்டெடுக்கவேண்டும். பின்பு அதைச் சுத்தம்செய்து மருந்து உரைக்கும் கல்லில் தேனைவிட்டு, உரைக்கவேண்டும். பின்பு அதை ஒரு பட்டாணி அளவு எடுத்து குழந்தைக்கு சங்கில் வைத்து தினம் இருவேளை புகட்டி வந்தால் மாந்த நோய் குணமாகும்.

குழந்தைகளின் கோழை வடிதல் நிற்க

நாய்த்துளசிசாற்றை எடுத்துக்கொண்டு அதனுடன் தாய்ப்பாலின் சில துளிகளைச் சேர்க்கவேண்டும். அதை தினமும் மூன்றுவேளை வீதம் மூன்று நாட்களுக்கு குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் கோழைவடிதல் நின்றுவிடும்.

குழந்தைகள் காய்ச்சல்

குழந்தைகளுக்கு உண்டாகும் சகலவிதமான காய்ச்சல்களும் குணமாக கீழ்க்கண்ட வைத்தியத்தைச் செய்யலாம்.

மிளகு, நிலவேம்பு, மஞ்சள் இவை ஒவ்வொன்றையும் அரைரூபாய் எடை அளவுக்கு எடுத்து அம்மியில் வைத்துதட்டி ஒரு சட்டியில் போடவேண்டும். அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். அது அரை டம்ளர் அளவுக்கு வற்றியவுடன் இறக்கிவிடவேண்டும். ஆறினதும் வடிகட்டி தினசரி இரு வேளை ஒரு சங்கின் அளவுக்கு குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சகலவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.