நடுதெருவில் துப்பாக்கி சூடு! வீடியோ காட்சியால் அதிர்ச்சி!

shoot - 2026

தில்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் வியாழக்கிழமை மாலை 56 வயதான நபர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுடப்பட்டார். இந்த சம்பவம் அருகில் இருந்த CCTV காமிராவில் பதிவாகியுள்ளது!

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் உத்தரபிரதேசத்தில் உள்ள புலந்த்ஷர் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதலின் போது மர்ம நபர் அவரது முதுகில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து ஹசன் தற்போது பட்பர்கஞ்சில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., “காயமடைந்தவர் உடனடியாக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு இருந்து பட்பர்கஞ்ச் மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடைப்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் CCTV-யிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது, இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர், பைக்கில் சென்ற ஹசனையும் அவரது நண்பரையும் துரத்தியதைக் காட்டுகிறது. மேலும் ஹசனை நோக்கி சுட்டுவிட்டு தப்பி ஓடுவதற்கு முன்பு துப்பாக்கியால் அடித்து தாக்கியுள்ளார்.

காவல்துறை விசாரணையில் ஹாசன் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒரே கிராம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories