ஆழ் துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி! மீட்பு பணி தீவிரம்!

Published:

borewell - 2026

ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி விழுந்தார். அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஹரியானாவின் ஹர்சிங்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானி (5). இவர் நேற்று வீட்டில் விளையாடி கொண்டிருந்தவர், திடீரென காணவில்லை. பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடினர்.

ஆயினும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் கர்நாலில் உள்ள போர்வெல்லில் சிறுமி விழுந்த விவகாரம் இரவு 9 மணிக்கு பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து தேசியபேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வருகின்றனர். அதற்குள்ளாக உள்ளூர் மக்கள் போர்வெல்லுக்கு பக்கத்தில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டி வருகின்றனர்.

சிறுமிக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. அவர் மீட்கப்பட்டவுடன் மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை 50 அடி ஆழத்தில் விழுந்துள்ளதால் பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img