இரண்டு ரூபாய்க்காக ஒரு கொலை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
murder 1 - 2026

கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடா மண்டலம் வலசபாக்கம் கிராமத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

இரண்டு ரூபாய்க்காக இருவர் இடையே நடந்த வாக்குவாதம் ஒரு மனிதனின் கொலைக்கு காரணமாகி உள்ளது.

சுவர்ண ராஜூ என்பவர் சைக்கிளில் காற்று நிரப்புவதற்காக வலசபாக்கத்திலுள்ள சாம்பா என்பவரின் சைக்கிள் கடைக்கு சென்றார். சைக்கிளில் காற்று நிரப்பிய பின் சாம்பா 2 ரூபாய் கொடுக்க வேண்டும் என சுவர்ணராஜுவிடம் கேட்டுள்ளார்.

அதனால் கோபமடைந்த சுவர்ணராஜு, சைக்கிள் கடைக்காரர் சாம்பாவை அடித்தார். அந்த நேரத்தில் அங்கிருந்த சாம்பாவின் நண்பர் அப்பாராவு, சுவர்ணராஜுவை கத்தியால் குத்தி விட்டார் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

காயம்பட்டவரை உடனே காகிநாடா அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.