
ரயிலிலிருந்து இறங்கும் போது வழுக்கி விழுந்த விபத்தில் தம்பதிகள் மரணம் அடைந்துள்ளனர்.
விசாகப்பட்டினம் மாவட்டம் ‘துவ்வாட’ ரயில்வே ஸ்டேஷனில் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அவசர அவசரமாக ரயிலில் இருந்து இறங்கிய போது வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தனர். அவர்கள் மீது ரயில் சென்றதால் தம்பதிகள் அங்கேயே மரணம் அடைந்தனர்.
சனிக்கிழமை இரவு ஹைதராபாத்திலிருந்து விசாகா செல்லும் ஸ்பெஷல் ரயிலில் சொந்த கிராமத்திற்கு செல்வதற்காக இந்த தம்பதிகள் ஏறினர்.
ஞாயிறு விடியற்காலை பிளாட்பாரம் எண் நான்கில் வேகமாக இறங்குகையில் வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தனர். ரயில் அவர்கள் மீது ஏறிச் சென்றதால் தம்பதிகள் அங்கேயே மரணம் அடைந்தனர்.
மரணம் அடைந்தவர்களை விஜய நகரத்தை சேர்ந்த கே. வெங்கட்ரமணா ராவு (40), கே.மணி (35) என்று அடையாளம் கண்டுள்ளனர். வெங்கட்ரமணாராவு ஆர்பிஎஃப் ல் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தார். மனைவியின் சொந்த கிராமமான துவ்வாடா விற்கு கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு கிளம்பி வந்தனர்.இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.



