சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! கடந்த வருடம் போல் இந்த வருடம் இருக்காது!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
SABARIMALAI NADI - 2026

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீக தலமான சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது

கோயிலுக்கு செல்ல பம்பையில் மதியம் 2 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.

சபரிமலை கோயிலில் இன்று மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பே தற்போதும் தொடர்கிறது என்பதால் பெண்கள் ஆன்லைன் வழியே முன்பதிவு செய்துள்ளனர்

இருப்பினும் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது சபரிமலை கோயிலுக்கு வர விரும்பும் பெண்கள் நீதிமன்றத்தில் உரிய அனுமதியும் உத்தரவு பெற்று வந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் இது மத வழிபாட்டு இடம் சமூக ஆர்வலரான இடம் இல்லை என்று தெரிவித்திருந்தார்

எனவே சபரிமலை பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் கவனித்து வந்தாலும் கடந்த வருடத்தை போல் பெரும் பரபரப்பு அரசியல் நடவடிக்கைகளோ இந்த முறை இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது காரணம் கடந்த வருடம் ஆளும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மற்றும் போலீசாரின் அடக்குமுறைகளால் சபரிமலை பக்தர்கள் பலர் பாதிக்கப்பட்டனர் அதன் விளைவு கடந்த தேர்தலில் எதிரொலித்தது நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது பாஜகவுக்கு வாக்கு சதவிகிதம் அதிகரித்தது அதேநேரம் கம்யூனிஸ்ட் படுதோல்வியடைந்தது

தேர்தல்கள் கொடுத்த பாடத்தால் ஆளும் கம்யூனிஸ்ட் போக்கில் மாறுதல் ஏற்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.