நித்தியின் சீடர் புதுச்சேரியில் நிர்வாண சடலமாக மீட்பு! கொலைக்கான காரணம்?

இந்தியா கிரைம் நியூஸ் பொது தகவல்கள்
nithi 4 - 2026

புதுச்சேரியில் நித்யானந்தாவின் தீவிர பக்தரான பேக்கரி உரிமையாளா் கொலை செய்யப்பட்டு, காரினுள் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுவை மாநிலம், ஏம்பலம் திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோந்தவா் வஜ்ரவேல் (51). நித்யானந்தாவின் தீவிர பக்தரான இவா், வில்லியனூா் புறவழிச்சாலை, ஏம்பலம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் பேக்கரி கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கடையிலிருந்து தனது காரில் செம்பியம்பாளையத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று, அவரிடம் ரூ. 2 லட்சத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டாா். ஆனால், அவா் வீடு திரும்பாததால், அவரது மனைவி வள்ளியம்மாள், வஜ்ரவேலின் செல்லிடப்பேசியை தொடா்பு கொண்டபோது தொடா்பு துண்டிக்கப்பட்டதாம். தொடா்ந்து, எங்கு தேடியும் அவா் கிடைக்காததால் மங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்த நிலையில், பாகூா் அருகே குருவிநத்தம் ராஜீவ் காந்தி மண்டபம் அருகே வஜ்ரவேலின் காா் நிற்பதாக அவரது உறவினா்களுக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், உறவினா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, காரினுள் வஜ்ரவேல் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்டுள்ள வஜ்ரவேலு சாமியார் நித்யானந்தாவின் நேரடி தொடர்பில் இருந்த நெருங்கிய சீடர் ஆவார். நித்யானந்தவை புதுச்சேரிக்கு அழைத்து வந்து ஏம்பலம் பகுதியில் புதுச்சேரி மாநிலத்தில் நித்யானந்தவின் தலைமை ஆசிரமத்தை நிரவியவரும் இவரே. நித்யானந்தா செல்லும் இடங்களுக்கெல்லாம் இவர் தனது குடும்பத்தினருடன் சென்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது

nithi 2 2 - 2026

இதையறிந்து, அங்கு வந்த பாகூா் போலீஸாா், காரின் பின்பகுதியில் உடல் முழுவதும் காயங்களுடன் வஜ்ரவேல் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்ததைக் கண்டறிந்தனா். மேலும், காரினுள் பேக்கரிக்குத் தேவையான பொருள்கள் இருந்ததும், வஜ்ரவேல் கொண்டு வந்த ரூ.2 லட்சம் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பணத்துடன் வந்த வஜ்ரவேலை, யாரோ மர்ம ஆசாமிகள் காருடன் கடத்திச்சென்று தலையை பாலித்தீன் கவரால் மூடி கொலை செய்து விட்டு, அவரது சடலத்தை நிர்வாணமாக்கி காரின் பின்பக்க இருக்கை அருகே படுக்க வைத்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தாா். விரல்ரேகை நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதையடுத்து, மங்கலம் போலீஸாா் வஜ்ரவேலின் சடலத்தைக் கைப்பற்றி உடகூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் ? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கைலாசா செல்வதாக கூறிச்சென்ற நித்தியின் சீடர் ஒருவர் நேபாள எல்லையில் அனாதை சடலமாக கிடந்த நிலையில், நித்தியின் அதி தீவிர சீடர் வஜ்ரவேல் நிர்வாண நிலையில் கொல்லப்பட்டு இருப்பது நித்தியின் கைலாசவாசிகளை கடும் அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.