தில்லி கலவரத்தில் போலீஸ்காரரை துப்பாக்கியால் மிரட்டி… 8 ரவுண்டு சுட்ட ஷாருக் கைது!

Published:

sharuk - 2026

தில்லியில் ஷாகீர் பாக் கலவரக் காரர்கள் கூட்டிய கூட்டத்தின் இறுதியில், வன்முறையைக் கையில் எடுத்தனர். சிறிது நாட்கள் பெண்களை அழைத்து வந்து போராட்டத்தில் அமர வைத்தவர்கள், அந்த இடைப்பட்ட நாட்களில் திட்டமிட்டு, இந்துக்களின் வர்த்தக ஸ்தாபனங்களை எரிப்பதற்கும், இந்துக்களைக் கொல்வதற்கும் திட்டம் தீட்டி, வன்முறையை ஏற்படுத்துவதற்கான ஆயுதங்களைச் சேகரித்து வைத்தனர். பின்னர், திங்கள் கிழமை பெரும் கலவரத்தைச் செய்தார்கள்.

தங்கள் பக்கத்து வீட்டில் பழகியவர்கள் கூட கைகளில் கல்லும் பெட்ரோல் குண்டுமாக தங்களை கொல்வதற்கு இறங்கியதைக் கண்டு அதிர்ந்து போனார்கள் இந்துக்கள். எவர் கடைகளில் எல்லாம் நோ சிஏஎ,நோ என் ஆர் சி என்று பெருக்கல் குறி அடையாளம் போட்டிருந்ததோ அந்தக் கடைகள் எந்த சேதமும் இல்லாமல் அப்படியே இருக்க, இந்துக்களின் கடைகள், வர்த்தக நிறுவங்கள் மட்டும் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.

sharukhan - 2026

இந்தக் கலவரங்களின் போது, ஷாருக் என்ற நபர், கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, ஒரு போலீஸ்காரரை மிரட்டினார். இந்தப் படங்கள் சமூகத் தளங்களில் வைரலானது. இந்நிலையில், இஸ்லாமியர்கள் மேற்கொண்ட வன்முறையின் போது துப்பாக்கியைக் காட்டி போலீஸ்காரரை மிரட்டிய ஷாருக் என்ற நபரை உ.பி.,யில் தில்லி போலீசார் கைது செய்தனர்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது வன்முறை வெடித்த நிலையில், மறு நாள் தங்கள் சொந்தங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீயில் எரிவது கண்டு கோபமுற்ற இந்துக்களும் வன்முறையில் இறங்கினர். இந்தப் போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் 47 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவங்களின் போது, பிப்.24 ஆம்தேதி அன்று ஜாப்ராபாத் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி ஒருவரையும் போலீசாரையும் நோக்கி , சிவப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

Delhi gunman Shahrukh - 2026

மேலும் துப்பாக்கியால் அவர் 8 ரவுண்டு சுட்டார். இது குறித்து தில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், அந்த நபர் தில்லி காரவல் நகரை ஷாருக் என்பது தெரியவந்தது. அவரை உத்தர பிரதேசத்தில் பைரேலியில் வைத்து தில்லி போலீசார் கைது செய்தனர். அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

Related articles

Recent articles

spot_img