ஜூன் 8 முதல்… திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
11 Sep12 Thirupathi
11 Sep12 Thirupathi
  • திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்கு அரசாங்கம் கிரீன் சிக்னல்.
  • ஜூன் 8 ம் தேதி மீண்டும் திறக்கப் போகும் திருமலைக்கோவில்.

உயிர்க்கொல்லி கரோனா வைரஸ் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடியிருந்த திருமலா திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் திறக்கப் போகிறது. திருமலையில் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு ஆந்திரப் பிரதேசம் மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

வைரஸ் காரணமாக 6 அடி தூரம் மனித இடைவெளி கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல் திதிதே ஊழியர்கள் உள்ளூர் மக்களோடு டிரயல் ரன் நடத்துவதற்கு அரசாங்கம் கிரீன் சிக்னல் அளித்துள்ளது. இதன்படி திதிதே ஈவோ எழுதிய கடிதத்திற்கு செவ்வாய்க்கிழமை மாநில அரசாங்கம் பதிலளித்துள்ளது.

லாக்டௌன் நிபந்தனைகளை கடைபிடித்தபடி ஶ்ரீவாரி தரிசனத்துக்கு அனுமதி அளித்து அரசாங்க பிரத்தியேக முக்கிய காரியதரிசி ஜெஎஸ்வி பிரசாத் செவ்வாயன்று உத்தரவுகள் வெளியிட்டுள்ளார்.

லாக்டௌன் நிபந்தனைகளை கடைபிடித்தபடி ஸ்ரீவாரி தரிசனத்தை தொடரலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க நிர்ணயத்தின்படி பக்தர்களின் வருகையை கவனத்தில் கொண்டு திதிதே அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 20ஆம் தேதி ஸ்ரீவாரி தரிசனத்தை நிறுத்தி வைத்தது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.