கொரோனா: தடுப்பூசி வாங்க மத்திய அரசு முனைப்பு!

இந்தியா சற்றுமுன்
corona vaccine

ஒட்டுமொத்த நாடுகளையும் முடக்கிப்போட்டுள்ள கொரோனாவுக்கு முடிவுகட்ட தடுப்பூசியை விரைந்து வாங்குவதில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது.

ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ராஜெனகா, அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் மற்றும் உள்நாட்டில் பாரத் பயோடெக், டெடிலா ஆகியவை தயாரிக்கும் 4 தடுப்பூசிகளை வாங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவற்றில் ஆக்ஸ்போர்டு கண்டுபிடுத்துள்ள கொரோனா தடுப்பூசி தான் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறது.

இந்தியாவை சேர்ந்த சீரம் நிறுவனம் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்திருப்பதால் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி வரும் டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்ந்து, அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் பரிசோதனையையும் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அதேநேரத்தில் உள்நாட்டிலேயே தயாராகும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சைரஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ் – டி ஆகிய கொரோனா தடுப்பூசிகளை வாங்கவும் மத்திய அரசு பரிசீலிக்கிறது.

ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிங் – 5 தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு குறித்து சர்ச்சைகள் எழுந்திருப்பதால் அதனை மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடனே அணுகுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.