கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை! அரசுப் பள்ளிக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

கல்வி சற்றுமுன் தமிழகம்
sencottaian-3

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமலே இருந்து வருகிறது. இருப்பினும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, காலாண்டு தேர்வுக்கான காலம் வந்துவிட்டதால், தேர்வு எப்போது நடத்தப்படும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வைரஸ் தாக்கம் குறைந்தபின், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், அரசு பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பை போலவே, 8 மற்றும் 11-ஆம் வகுப்பிலும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.