பெரு மழையால் உடைந்துபோன மேடாரம் ஜம்பன்ன வாகு பாலம்!

இந்தியா சற்றுமுன்
medaram-flood
medaram-flood
  • மேடாரம் கிராமத்தில் பெரு வெள்ளம் .
  • பெரு மழையால் உடைந்துபோன மேடாரம் ஜம்பன்ன வாகு பாலம்.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் முலுகு மாவட்டத்தில் மிகப்பெரும் அளவில் மழை பெய்து வருகிறது. அதனால் ஏடூருநாகாரம் மண்டலத்திலுள்ள புகழ்பெற்ற ஜம்பன்னவாகு நதியில் வெள்ளநீர் மிகப்பெரும் அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் பிரவாகம் அதிகமாக இருப்பதால் நதி மீதிருந்த பிரிட்ஜ் இடிந்து போனது.

medaram-bridge
medaram-bridge

தொட்ல கிராமம் அருகில் இன்று காலை பாலம் உடைந்து போனதாக செய்தி. இந்த பாலத்தை ஜம்பன்ன வாகு நதி மீது 2015ல் அமைத்தார்கள். பாலம் உடைந்து போனதால் மர்யால, கொண்டாயி, ஐலாபுரம் கிராமங்களுக்கு போக்குவரத்து நின்று போய்விட்டது.

அதுமட்டுமின்றி ஜம்பன்ன வாகுவின் நீர்ப் பெருக்கு காரணமாக மேடாரம் கிராமம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. சம்மக்கா கோவில் எனப்படும் மேடையைச் சுற்றிலும் நீர் சூழ்ந்துள்ளது.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.