
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அடுத்த கலந்தபனை புதூரில் ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் குடித்தனம் நடத்தி வந்தவர் ஸ்டீபன். 25 வயது இளைஞருக்கு இரண்டு பொண்டாட்டியா என்று ஊரே ஒரு மாதிரியாக பேசி வந்தது.
ஆனால், அந்த ஊருக்கும் தெரியாது. அந்த இரண்டு மனைவிகளுக்கும் கூட தெரியவில்லை. ஸ்டீபனுக்கு இரண்டு காதலிகள் இருப்பது. 10ம் வகுப்பு மாணவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய வழக்கில் அது இப்போது அம்பலமானது.
பணகுடி காவல்நிலையத்தில் தங்களது மகளை காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தபோது, 10ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவியை ஸ்டீபன் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துசென்றது தெரியவந்தது.
பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து அந்த மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி ஸ்டீபன் வந்துபோனதை கண்டித்த நேரத்தில்தான் மகளை காணவில்லை என்பதை உணர்ந்த பெற்றோர், ஸ்டீபன் தான் கடத்திச் சென்றிருப்பான் என்பதையும் ஊகித்தனர்.
தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்ததில், நாகர்கோவிலில் மலைப்பகுதியில் இருக்கும் மாட்டுப்பண்ணையில் சாணம் அள்ளும் வேலை பார்த்துக்கொண்டு மாணவியுடன் வசித்து வருவது தெரியவந்தது. தனிப்படை போலீசார் ரகசியமாக சென்று ஸ்டீபனை சுற்றி வளைத்தனர்.

தன்னை திருமணம் செய்துகொள்வதாக அழைத்து வந்து உறவு கொண்டதாக மாணவி கூறியிருக்கிறார்.
ஸ்டீபனை அடித்து விசாரித்ததில், இரண்டு மனைவிகள், இரண்டு காதலிகள் மற்றும் மாணவியுடன் சுழற்சி முறையில் குடித்தனம் நடத்தி வந்ததை ஒப்புக்கொண்டான்.
சிறுமியை கடத்திய வழக்கு மற்றும் சிறுமியை வன்கொடுமை செய்ததால் போக்சோ சட்டமும் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்டீபன்.