மாவிலை பறிக்க சென்ற மகனுக்கு நேர்ந்த விபரீதம்!

சற்றுமுன் தமிழகம்
Mango leaf 1 - 2026

மா இலை பறிக்கச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தம்பாடிபுதூர் கிராமத்தில் வசித்து வருபவர் தேவராஜ்-பழனியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சௌந்தர்யா என்ற மகளும் கோபாலகிருஷ்ணன் என்ற மகனும் இருந்தனர். இவர்கள் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசத்திற்கு தனது உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து இருந்தார்.

இந்நிலையில் வீட்டின் கிரகப்பிரவேச பூஜைக்காக மா இலை தேவைப்பட்டதால் கோபாலகிருஷ்ணன் தனது வீட்டின் மாடி மீது உள்ள தண்ணீர் தொட்டி மேல் ஏறி நின்று மா இலையைப் பறிக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் கோபாலகிருஷ்ணனின் கை விரல் எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியின் மீது பட்டுள்ளது.

இதனால் அவர் தண்ணீர் தொட்டிக்குள் தூக்கி வீசப்பட்டு அங்கேயே உயிரிழந்தார்.

shock
shock

இந்த சத்தத்தை கேட்டு அவரது உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து பார்த்த போது அவர் தொட்டிக்குள் பிணமாக கிடந்ததாய் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொட்டிக்குள் இருந்த கோபாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.