சிறுமிகளுக்கு வீரிய மாத்திரை கொடுத்து ஓரினச் சேர்க்கைக்கு ஈடுபடுத்திய சித்தி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
vankodumai 1 - 2026

உத்தரபிரதேசத்தில் சிறுமிகளுக்கு வீரிய மாத்திரை கொடுத்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையை தனது பேஸ்புக் நட்பு மூலம் 4வதாக திருமணம் செய்து கொண்டது அம்பலமாகி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் சாஸ்னி கேட் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், அலிகார் போலீசில் விநோதமான புகாரை அளித்தார்.

அதில், ‘எனது தாய் 2019 பிப்ரவரியில் இறந்துவிட்டார். என்னுடன் 2 சகோதரிகளும், 1 சகோதரனும் உள்ளனர். எனது தந்தை, எங்களது தாய் இறந்த பின்னர் பேஸ்புக் சமூக வலைதளத்தின் மூலம் 45 வயது மதிக்கக்தக்க ஒரு பெண்ணிடம் நட்பு கொண்டு பழகி வந்தார்.

பின்னர் அந்த பெண்ணை 2020 பிப்ரவரி 14ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் தந்தையின் திருமணத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, சில நாட்களில் தந்தையின் 2வது மனைவிையை ஏற்றுக் கொண்டோம்.

சில மாதங்களுக்கு பின் அந்த பெண், எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா ஒரு மாத்திரை கொடுக்கத் தொடங்கினார். இந்த மாத்திரை ஆரோக்கியத்திற்கு தருவது என்றும் கூறினார்.

எனக்கும், என் சகோதரிகளுக்கும் குறிப்பிட்ட மாத்திரையை கொடுத்த பின்னர், எங்களிடம் தகாத முறையில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார். நாங்கள் எங்கள் தாத்தாவிடம் புகார் செய்தபோது, ​​அந்தப் பெண் எங்கள் அனைவரையும் அச்சுறுத்தத் தொடங்கினார்.

அதேநேரத்தில் எங்கள் தந்தை, அந்த பெண்ணுக்கு ஆதரவாக இருந்தார். அதனால், எங்கள் மீது பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வரும் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, போலீசார் குற்றம்சாட்டப்பட்ட அந்த பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு நான்கு திருமணங்கள் நடந்துள்ளது. அந்த பெண்ணின் முதல் கணவர் 2005ல் மர்மமாக இறந்தார்.

இதுதொடர்பாக அந்த பெண் சிறைக்குச் சென்றார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அலிகாரில் வசிக்கும் மற்றொருவரை மணந்தார். பின்னர் அவரையும் கைவிட்டார். சில மாதங்களுக்கு பின்னர் ஜலல்பூரைச் சேர்ந்த ஒருவரை மணந்து பின்னர் விவாகரத்து செய்தார்.

தொடர்ந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் மூன்று திருமணங்கள் செய்து கொண்டு, நான்காவதாக பேஸ்புக் நட்பு மூலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் தந்தையை திருமணம் செய்து கொண்டார்.

அந்த பெண் வீட்டில் இருக்கும் 19 வயது இளம்பெண் மற்றும் 2 சிறுமிகளுக்கு பாலியலை தூண்டக்கூடிய வீரிய மாத்திரைகளை கொடுத்து ஓரின சேர்க்கையில் (லெஸ்பியன்) ஈடுபட்டுள்ளார்.

சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால், அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து அந்த பெண் தற்போது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.