மனைவியை மது அருந்த சொல்லி கொடுமை செய்த கணவன்!

Published:

madhu

பெங்களூரு சிக்கமாவள்ளி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாத். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது.

அந்த பெண்ணுக்கு 27 வயதாகிறது. ரங்கநாத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக ரங்கநாத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், அந்த பெண்ணை கேளிக்கை விடுதி, உணவு விடுதிகளுக்கு அழைத்து செல்லும் ரங்கநாத், அங்கு வைத்து மதுஅருந்தும்படி கூறி வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

ஆனால் அவர் மதுஅருந்த மறுத்து வந்துள்ளார். இதனால், வீட்டுக்கே மது வாங்கிவிட்டு வந்து, அதனை குடிக்கும்படி கூறி தனது மனைவிக்கு ரங்கநாத் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தனது கணவர் ரங்கநாத் மீது பசவனகுடி மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img