ஏடிஎம்-ல் கீழே கிடந்த ரூ.நான்கு லட்சம்! காவல்துறையில் ஒப்படைத்தவர்க்குப் பாராட்டு!

இந்தியா சற்றுமுன்
atm

தேனி ஏ.டி.எம்.,மில் கிடந்த ரூ.4 லட்சத்தை போலீசாரிடம் ஒப்படைத்த கேத்தன்பட்டேல் 41, என்பவரை சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., பாராட்டினார்.

தேனிதேனி — பெரியகுளம் ரோட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்.,மில் பழனிச்செட்டிபட்டியை சேர்ந்த கேத்தன்பட்டேல் என்பவர் பணம் எடுக்கச் சென்றார்.

மிஷினுக்கு அருகில் ரூ.2000 நோட்டுக்கள் அடங்கிய 2 கட்டுக்கள் கிடந்தன. அதனை எடுத்தவர் தேனி போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பியபோது ஊழியர்கள் தவற விட்டு சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று ரூ.4 லட்சத்தை வங்கி மேலாளரிடம் சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., ஒப்படைத்தார். பணத்தை போலீசாரிடம் வழங்கிய கேத்தன்பட்டேலை பாராட்டி பரிசு வழங்கினார்.

தேனி டி.எஸ்.பி., முத்துராஜ், இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம், போலீசார் உடனிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.