கரையானுக்கு இரையான ரூ.5 லட்சம்! விவசாயியின் பல வருட சேமிப்புக்கு நேர்ந்த பரிதாபம்!

இந்தியா சற்றுமுன்
Moth-eaten-money-1
Moth-eaten-money-1

ஆந்திராவில் விவசாயி ஒருவர் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை கரையான் அரித்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆந்திராவின் உள்ள கிருஷ்ணா மாவட்டம் என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜமாலியா இவர் வங்கி கணக்கு எதுவும் இல்லாததால் தனது வீட்டிலேயே சேமிப்பு பணத்தை இரும்பு பெட்டி ஒன்றில் வைத்து பாதுகாத்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் பணத்தை இரும்பு பெட்டியை திறந்து பார்க்கவில்லை. இதனை அடுத்து சமீபத்தில் அவர் இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளையும் கரையான்கள் அரித்துவிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த பணம் முழுவதையும் கரையான் அரித்து விட்டதால் வேதனையின் உச்சத்தில் உள்ளார்.

இதுகுறித்து ஆந்திர அரசு அவருக்கு இந்த பணத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.