ஒடிஸாவில் ரூ. 13 ஆயிரம் கோடி செலவில் பிரமாண்ட உரத் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து இரண்டாவது விமான நிலையத்தையும் திறந்து வைத்தார்.
ஒடிசாவின் நிலக்கரி நகரம் என்றழைக்கப்படுகிறது தல்சேர். இந்திய உரக் கழகம் நடத்தி வந்த தல்சேர் உரத் தொழிற்சாலை பல்வேறு காரணங்களால் 2002ஆம் ஆண்டு மூடப்பட்டது. இதை புதுப்பிப்பது என 2011ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. கெயில், கோல் இந்தியா உள்ளிட்ட 4 அரசுத்துறை நிறுவனங்கள் இணைந்து, தல்சேர் உர நிறுவனத்தை உருவாக்கின.
இந்த தல்சேர் உரத் தொழிற்சாலையை ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கே உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவிலேயே நிலக்கரியில் இருந்து வாயு தயாரித்து அதை மூலப் பொருளாக பயன்படுத்தும் முதல் உரத் தொழிற்சாலையாக, தல்சேர் அமையும் என்றார்.
மேலும், தல்சேர் உரத் தொழிற்சாலை 36 மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கும்; உற்பத்தியைத் தொடங்கி வைக்கவும் நான் வருவேன் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார் மோடி!
மேலும், முத்தலாக் தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப் பட்டிருக்க வேண்டிய முக்கியமான முடிவை 3 நாட்களுக்கு முன்னர் அரசு எடுத்தது என்று குறிப்பிட்ட மோடி, வாக்குகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் யாரும் முத்தலாக் குறித்து பேசுவதற்குக் கூட பயந்தனர் என்றார். மேலும், மக்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது, ஆனால் அதை மாநிலங்களவையில் நிறைவேற்ற விடாமல் தடைகளைச் செய்தார்கள். ஆனால் முத்தலாக் என்ற மோசமான நடைமுறையில் இருந்து முஸ்லிம் சகோதரிகளைப் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றார் மோடி.
இந்நிகழ்ச்சிக்குப் பின், ஜார்சுகுடா என்ற இடத்தில் அமைந்துள்ள உள்ளூர் விமான நிலையத்தை தொடங்கி வைத்தார் மோடி. ஜர்ஜ்குடாவில் வீர் சுரேந்திரா சாய் விமான நிலையம் இரண்டாவது விமான நிலையமாக இன்று அர்ப்பணிக்கப் பட்டுள்ளது என்று குறிப்பிட்டார் மோடி!
Today Odisha got its second airport in Veer Surendra Sai Airport at Jharsuguda. It is a matter of immense joy for the state and I hope it enhances connectivity in the region. pic.twitter.com/6mW4rjRiLS
— Narendra Modi (@narendramodi) September 22, 2018
இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘பிரதமர் ஜன் ஆரோக்யா’ என்ற சுகாதார பாதுகாப்பு திட்டத்தை நாளை(செப்.23) பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பயனடையும் இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது.
Addressed a massive public meeting in @JanjgirDist. Talked at length about the efforts of the Central Government and the Chhattisgarh Government towards the welfare of the state’s farmers, youth and poor. Here is my speech. https://t.co/6zgmUzyzQI pic.twitter.com/LxwWfy1QG1
— Narendra Modi (@narendramodi) September 22, 2018




