தாய்மொழியுடன் மேலும் ஒரு இந்திய மொழியைப் பயில வேண்டும்: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

ramnath khovind - 2026

புது தில்லி: இந்தியர்கள் அனைவரும் தமது தாய்மொழியுடன், மற்றொரு மாநில மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபாவின் நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அப்போது அவர், மக்களை இணைப்பதில் மொழியின் பங்கு முக்கியமானது! ஹிந்தி பேசும் இளைஞர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் வளமான பண்பாட்டை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். புதிய வாய்ப்புகளையும் அவர்கள் பெற முடியும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.