காலேஜ் படிக்கும் மகளை விட அவங்க அம்மா சூப்பர்! தாயுடன் ஓடிய இளைஞன்!

சற்றுமுன் தமிழகம்
lovers
lovers

21 வயது கல்லூரி மாணவனுடன் 45 வயது பெண் ஒருவர் ஊரை விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் காந்தி காலனி பகுதியை சேர்ந்தவர் 45 வயது பெண்மணி. இவருக்கு திருமணம் முடிந்து கல்லூரி படித்துவரும் ஒரு மகளும், 10 ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மகனும் உள்ளனர்.

பெண்ணின் கணவர் பெயிண்டிங் வேலை பார்த்துவருகிறார். கணவனின் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இல்லை என்பதால், அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டு குடும்பத்தை நடத்திவந்துள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் வீட்டிற்கு அருகே உள்ள குடும்பத்தினர் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்ததோடு, அவரது குடும்பத்தில் ஒருவராக மாறியுள்ளனர்.

இந்நிலையில்தான் அந்த குடும்பத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவன் ஒருவருக்கும், இந்த பெண்மணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இரவு நேரங்களில் தனது பிள்ளைகள், கணவனை வெளியே அனுப்பிவிட்டு, அந்த இளைஞருடன் இரவு முழுவதும் வீடியோ காலில் பேசிவந்துள்ளார்.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

இந்த தகவல் அந்த பெண்மணியின் மகளுக்கு தெரியவர, அவரும் தனது தாயாரை கண்டித்துள்ளார். ஆனாலும் அதனை கேட்காமல் தனது கள்ள காதலை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில்தான் ஒருநாள் கல்லூரி படிக்கும் இளைஞரை காணவில்லை. அதே நேரம் இந்த 45 வயது பெண்ணையும் காணவில்லை.

இருவரின் குடும்பத்தினரும் அவர்களை பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் மினி பஸ் ஒன்றில் ஏறி, நாகர்கோவிலுக்கு சென்றுள்ளது தெரியவந்தது.

நடுத்தர வயதையும் நம்பமுடியவில்லை. வாலிப வயதையும் நம்ப முடியவில்லை என மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.