கொரோனா நோயாளிகளிடமிருந்து மருந்தை திருடி விற்ற நர்ஸ்!

இந்தியா சற்றுமுன்
remdesivir
remdesivir

கொரானா பாதித்து இறந்து போகும் நோயாளிகளிடமிருந்து பல மருந்துகளை திருடி விற்ற நர்ஸ் மற்றும் அவரின் உதவியாளர்களை போலீசார் கைது செய்தனர் .

தில்லியில் உள்ள மூல்சந்த் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் லலிதேஷ் சாய்ஹான் என்ற 24 வயதான பெண் அங்கு பல கொரானா நோயாளிகளை கவனித்து வந்தார் .

அவரோடு நர்சிங் உதவியாளர் படிப்பை முடித்த அவரது நண்பர் சுபம் பட்நாயக், மற்றும் விஷால் காஷ்யப் மற்றும் விபுல் வர்மா ஆகியோரும் அவரோடு அங்கு பணியாற்றி வந்தனர் .

இந்நிலையில் அவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து அந்த ஹாஸ்ப்பிட்டலில் கொரானாவால் இறந்து போகும் நோயாளிகளின் அறைக்குள் சென்று அங்கு இருக்கும் ரெமெடிசிவர் என்ற மருந்துகளை திருடி வெளியே நல்ல விலைக்கு விற்றுள்ளனர் .

இது பற்றி சிலர் ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகத்திடம் புகாரளித்தனர் .அதனால் ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகம் அவர்களை ரகசியமாக கண்காணித்த போது அவர்களின் குற்றம் ஊர்ஜிதமானது.

அவர்கள் இறந்து போன நோயாளிகளின் அறைக்குள் சென்று அங்கு உபயோகிக்காமல் இருக்கும் ஊசி மருந்துகளை எடுத்து சென்று வெளியே விற்றுள்ளதை கண்டுபிடுத்தனர்.

அதனால் அவர்கள் மீது போலீசில் புகாரளிக்கப்ட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்தது பல ரெமெடிசிவர் மருந்து குப்பிகளை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.