பிரபல நடிகரின் மகன் போதைப்பொருள் கடத்தலில் கைது!

இந்தியா சற்றுமுன்
dhuruv
dhuruv

மும்பையில் போதைப்பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் திலீப் தஹிலின் மகன் துருவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தது .

பாலிவுட் நடிகர் திலீப் தஹிலின் மகன் துருவ் 2019 ஆம் ஆண்டில் போதைப்பொருள் விற்பனையாளர் முசம்மில் ஷேக்கை சந்தித்து அவரிடமிருந்து பல முறை போதை மருந்துகளை ஆர்டர் செய்தார்.
இது சம்பந்தமாக பாலிவுட் நடிகரான துருவ் தஹில்த்ரூவ், அந்தேரியில் (கிழக்கு) உள்ள அவரது இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். அந்தேரி (கிழக்கு) போலீசில் துருவ் மீது என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மும்பையின் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் திலீப் தஹிலின் மகன் துருவ் தஹில் என்பவரை மும்பை போலீஸ் குற்றப்பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (ஏஎன்சி) கைது செய்துள்ளது.

ஒரு நபரிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கி உட்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட துருவை புதன்கிழமை ஏ.என்.சி கைது செய்தது.

துருவ் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று ஏ.என்.சி.யின் துணை போலீஸ் கமிஷனர் தத்தா நலாவடே உறுதிப்படுத்தினார்.துருவ் மீது என்.டி.பி.எஸ் சட்டத்தின் பிரிவு 27 ( போதைப் பொருளை உட்கொண்டதற்கான தண்டனை) மற்றும் 29 (தூண்டுதல் மற்றும் குற்றச் சதிக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

முசம்மில் ஷேக் (34) என்ற போதைப்பொருள் விற்பனையாளர் மீது ஏப்ரல் 20 ம் தேதி ஏ.என்.சி அதிகாரிகள் போதைப்பொருள் வைத்திருந்ததாக போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அப்போது ஷேக் தனது வசம் வைத்திருந்த 35 கிராம் மெபெட்ரோனுடன் கைது செய்யப்பட்டார். அப்போது ஷேக்கின் மொபைல் போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் குற்றம் சாட்டப்பட்ட துருவ் போனில் பல முறை போதை மருந்துகளைக் கேட்டுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.