ஆதாரில் மொபைல் நம்பர் மாற்ற வழிமுறை!

Published:

aathar
aathar

ஆதார் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ள அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆதார் எண் என்பது இந்தியா முழுவதிலும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயமாக்கப்பட்ட ஒன்றாகும். ஆம், ஒரு குழந்தை பிறந்து 1 வயது முடிந்துவிட்டாலே ஆதார் கார்ட் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதன் பெயர் பால் ஆதார் ஆகும்.

இவ்வளவு முக்கியமான ஆதார் எண்ணை வங்கி கணக்குடனும், தொலைபேசி எண்ணுடனும் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து ஆதார் கார்டில் உள்ள விவரங்களை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் எனவும் அரசு தற்போது தெரிவித்துள்ளது.

இதன்படி ஆதாரில் உள்ள பெயர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, மாதம், வருடம் போன்றவைகள் தவறாக இருந்தாலே அல்லது புதுப்பிக்க நினைத்தாலோ புதுப்பித்து கொள்ளாலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஆதாரில் விவரங்கள் தவிர தங்கள் புகைப்படங்களையும் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

தற்போது ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்திய அரசு, அதற்கான வழிமுறைகளையும் கொடுத்துள்ளது. https://ask.uidai.gov.in என்ற முகவரிக்குச் சென்று, GET OTP பட்டனை கிளிக் செய்து OTP பெற வேண்டும்.

அந்த எண்ணை பதிவிட்டு ஆதார் அப்டேட் என்பதை கிளிக் செய்து மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளலாம் மேலும் தங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்க விரும்பினால் அதை தேர்வு செய்து விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

கொடுத்த தகவல் சரிதானா என்பதை சரி பார்த்து சேமித்து விட்டு, அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று 50 ரூபாய் கட்டணம் செலுத்தி மாற்றிய புதிய எண்ணை ஆதாரில் பெற்றுக்கொள்ளலாம்.

Related articles

Recent articles

spot_img