கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விராட் கோலி!

இந்தியா சற்றுமுன்
Kholi
Kholi

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தில்லி தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொண்ட போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் முன் வர வேண்டும் என கூறினார். ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள், மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது.

ஆகையால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் எதிரான பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளார்.

தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து விராட் கோலி கொரோனா நிவாரண நிதி திரட்டினார். முதற்கட்டமாக ரூ.2 கோடியை அவர்கள் நன்கொடையாக வழங்கினர்.

இரண்டாம் கட்டமாக அடுத்த 24 மணி நேரத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் நிதி வசூல் ஆகி உள்ளதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மற்றவர்களும் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கும்படி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.