கொரோனா: 7 மாத கர்ப்பிணி.. இறப்பதற்கு முன் மக்களுக்கு வேண்டுகோள்! வைரல்!

இந்தியா சற்றுமுன்
timple
timple

கொரோனோ தொற்று பாதிப்பால் 7மாத கர்ப்பிணி உயிரிழப்பு இறப்பதற்கு முன்பு அவர் பேசிய விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, தில்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் ட்விட்டரில் தற்பொழுது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அந்த வீடியோ பில் நவீன் சாவ்லா என்பவரின் மனைவி டிம்பிள் 7மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நோய்தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக வேதனையுடன் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் என்னுடைய மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை பிறந்த அடுத்த நாளே என்னுடைய மனைவியும் இறந்து விட்டாள் இறப்பதற்கு முன்பு அவர் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பேசிய வீடியோவை தற்பொழுது அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவருடைய மனைவி கூறுகையில் இந்த தொற்றுநோயை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது ஒரு மோசமான நோய் என்று கூறிய அவர் உங்கள் அருகில் உள்ளவர்களிடம் பேசும்பொழுது மற்றவர்களின் பாதுகாப்பிற்காகவும் உங்களுடைய பாதுகாப்பிற்காகவும் முக கவசம் அணிவதை மறந்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்த நோய் குறித்து பொறுப்பற்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டாம் ஏனென்றால் உங்கள் வீட்டில் வயது முதியவர் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் என அனைவரும் இருக்கும் இடம்.

நான் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்ணாக இருந்து வந்தேன் ஆனால் தற்பொழுது நோய்த்தொற்று காரணமாக என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்னுடைய உடல் ஒத்துழைக்க மறுக்கிறது என்று உருக்கமாக பேசியுள்ளார்.

தற்பொழுது அவருடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் அவருடைய மூன்று வயது குழந்தை என்னுடைய அம்மா எங்கே என்று கேட்பதாக தந்தை வருத்தத்துடன் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ அனைவர் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.