vankodumai - 2026

பெண் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்து ,போட்டோ எடுத்து மிரட்டியதாக ஒரு சப் இன்ஸ்பெக்டர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது

தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவரின் கண்ட்ரோலில் ஒரு பெண் கான்ஸ்டபிள் சமீபத்தில் பணியில் சேர்ந்தார் .

அந்த பெண் போலீஸ் இளம் வயது பெண் என்பதாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்ததாலும் அவருக்கு அவரின் உயரதிகாரியால் அந்த சப் இன்ஸ்பெக்டரால் ஆபத்து வந்தது .

ஒரு நாள், அவர் அந்த பெண் போலீசை தில்லியின் முன்றிகா பகுதியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். பின்பு அவர் அந்த பெண்ணுக்கு அங்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை கொடுத்தார் .

அதை வாங்கி குடித்த பிறகு, அந்த பெண் போலீஸ் சுயநினைவை இழந்து , மயங்கி விழுந்தார். அதை தொடர்ந்து, அந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது ‘ஆபாச’ புகைப்படங்களை எடுத்தார் .

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

பின்னர், மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண்ணிடம் அவர் அந்த ஆபாச புகைப்படங்களை காமித்து , இந்த விஷயத்தை வெளியே சொன்னால் இதை இணையத்தில் பதிவேற்றுவதாக அவரை மிரட்டினார்.

அதனால் அந்த பெண் போலீஸ் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி ,அந்த சப் இன்ஸ்பெக்டர் மீது உயரதிகாரிகளிடம் புகாரளித்தார். பிறகு அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending