கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கண்டிப்பாக இந்த பரிசோதனை செய்யவும்: சுகாதார துறை அமைச்சர் வேண்டுகோள்!

Published:

corona virus
corona virus

கொரோனோ நோயிலிருந்து குணமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தானாக முன்வந்து காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்.

கொரோனோ நோய்த் தொற்றிலிருந்து மீண்ட 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மாநிலத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனோ வைரஸ் மற்றும் காசநோய் இரண்டும் நுரையீரலைப் பாதிக்கும் என்பதால் காசநோயை முன்கூட்டியே கண்டறிவதை உறுதி செய்வதற்காக நாங்கள் ஒரு சிறப்பு இயக்கத்தைத் தொடங்கியுளோம்.

மக்கள் அனைவரும் தானாக முன்வந்து காச நோய்க்கான பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மாநிலத்தில் 31 வரை நடைபெறும் சிறப்புக் காசநோய் சோதனை இயக்கத்தைத் தொடங்கிவைத்த பின் இதனை அவர் கூறினார்.

மேலும் 2017 முதல், 75 லட்சம் காசநோய் வழக்குகள் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 88 சதவீதம் சோதனை செய்யப்பட்டுள்ளன. சுமார் 3.9 சதவீதம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

பிரதமர் நரேந்திர மோடியும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவைக் காசநோயிலிருந்து விடுபட வேண்டும் என்ற இலக்கில் சென்று கொண்டிருக்கிறார். அதை மையமாக வைத்து மாநில அரசு இந்த இலக்கை நோக்கி செயல்படுகிறது.

மேலும் கொரோனோ மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கலாம் என்ற நிபுணர்களின் பார்வையை மனதில் வைத்து ‘ஆரியோக்ய நந்தனா’ என்ற புதிய முயற்சி தொடங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

மாநிலத்தில் சுமார் 1.5 கோடி குழந்தைகள் உள்ளனர், அவர்கள் அனைவரும் இந்த முயற்சியின் கீழ் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதை விரைவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைப்பார்” என்று அவர் கூறினார்.

Related articles

Recent articles

spot_img