பிறந்த வீட்டுக்குத் திரும்பிய பெண்… 52 ஆண்டுகள் காத்திருந்து… புகுந்த வீட்டில் பெற்ற நீதி!

Published:

registration
registration

திருமணமான ஓராண்டிற்குள் கணவன் இறந்ததால் பிறந்த வீட்டிற்குச் சென்றாள் அந்தப் பெண். 52 ஆண்டுகள் கழித்து என்ன நடந்தது?,

சாதாரணமாக பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் விஷயம் என்னவென்றால் காத்திருப்பது. சிறிது நேரம், சிறிது காலம் வேண்டுமானால் காத்து இருக்கலாம். ஆனால் ஒரு புள்ளியில் அதற்கு பின் எரிச்சல் அதிகமாகி விடும்.

ஆனால் ஒரு பெண்மணி தனக்கு கிடைக்க வேண்டிய நியாயத்திற்காக 52 ஆண்டுகள் காத்திருந்தார்.

1967இல் சம்பத் சின்ஹா என்பவர் லீலா என்ற பெண்ணை மணந்தார். இது நடந்தது குஜராத்தில். திருமணமான ஓராண்டிற்குள் சம்பத் மரணமடைந்தார். அவர்கள் குடும்பத்து வழக்கப்படி லீலா தன் பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அதன் பின்னர்தான் லீலாவுக்கு ஒரு விஷயம் தெரியவந்தது. நதியாட் என்ற ஊரில் நாற்பத்தி மூன்று பிகாட் நிலம் தன் கணவர் பெயரில் உள்ளது என்றும், அதனைத் தன் மைத்துனர் மஹிபத் சின்ஹா அனுபவித்து வருகிறார் என்றும் தெரிந்து கொண்டார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

புகுந்த வீட்டிற்குச் சென்று மஹிபத்தை கேட்டார். அதற்கு அந்த மைத்துனர் அப்படிப்பட்டது எதுவும் இல்லை என்று கூறி விட்டார். ஆனால் ஊரில் விசாரித்தபோது தன் கணவர் பெயரில் நிலம் இருக்கும் விஷயம் உண்மைதான் என்பதை அறிந்து கொண்டார்.

அதனால் லீலா போலிசாரிடம் புகார் அளித்தார். ஆனால் அதற்கு தகுந்த பத்திரங்கள் இல்லாததால் அவர்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை. மஹிபத் அதற்குள் தனக்கு அனுகூலமாக அனைத்து பாத்திரங்களையும் தயார் செய்துவிட்டார்.

ஆனால் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு அரசாங்க அலுவலகமாக ஏறி இறங்கினார் லீலா. கடைசியில் மம்லத்தார் முனிசிபல் ஆபீஸில் தன் கணவரின் பெயரில் அந்த நிலம் தொடர்பான டாகுமென்ட்கள் இருப்பதாக தெரிந்து கொண்டார். அதுமட்டுமின்றி அந்த நிலத்திற்கு தான் ஒருவரே வாரிசு என்பதையும் அறிந்தார். அந்த பத்திரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார் லீலா.

டிசம்பர் 2020 இல் இந்தப் பத்திரங்களை போலீஸ் ஸ்டேஷனில் சப்மிட் செய்தார். இந்த விஷயம் குறித்து போலீசார் மஹிபத்தை அழைத்து விசாரித்தபோது, தான் பத்திரங்களை போர்ஜரி செய்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

போலிசார் இந்த நிலத்துக்கு உரிமையாளர் லீலாவே என்று தெரிவித்தனர். அதனால் 52 ஆண்டுகளாக காத்திருந்தற்கான நீதி அண்மையில் கிடைத்தது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img