திரிபுராவில் தொடங்கிய சிலை உடைப்பு விவகாரம்: உ.பி.யில் மர்ம நபர்களால் அபேத்கர் சிலை சேதம்!

Published:

திரிபுராவில் தொடங்கி, தொடர்ந்து பரவி வரும் சிலை உடைப்பு கலாசாரத்தின் ஒரு பகுதியாக, மர்ம நபர்களால் அம்பேத்கார் சிலை உடைக்கப் பட்டுள்ளது.

திரிபுராவில் பாஜக.,வினர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 25 ஆண்டு கால இடதுசாரிகளின் அடக்குறையில் இருந்து திரிபுராவுக்கு விடுதலை கிடைத்ததைக் குறிப்பிடும் அடையாளமாக, அங்கே கம்யூனிச அரசால் கௌரவம் எனக் கருதி நிறுவப் பட்ட லெனின் சிலையை பாஜக., தொண்டர்கள் சிலர் அகற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அங்கே தொடங்கிய சிலை உடைப்பு கலாசாரம் படிப்படியாக மற்ற இடங்களுக்கும் பரவி வருகிறது.

இப்படி சிலைகள் உடைப்பு சம்பவத்தின் மற்றொரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலத்தில் அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் மவானா குர்த் பகுதியில் அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அங்கே போராட்டம் வெடித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. போராட்டம் குறித்தும், சிலை உடைப்பு குறித்தும் விசாரிக்கப் பட்டு வருகிறது. அங்கு புதிய சிலை அதேபோன்று அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து அங்கே போராட்டம் தணிந்துள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இதற்குப் போட்டியாக, ஜன சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் சிலை பீடத்தை கோல்கத்தாவில் சேதப் படுத்தியதாக ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளன.

இது போல், தமிழகத்திலும் வேலூரில் ஈ.வே.ரா. சிலை உடைக்கப் பட்டதும், அதனைத் தொடர்ந்து பதற்றம் எழுந்ததும் குறிப்பிடத் தக்கது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img