நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார். அதேபோல் பாஜக தலைவர்களும் கமல்ஹாசனை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:

நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானவன். நான் இந்து விரோதி அல்ல, இந்துத்துவாவுக்கு எதிரானவன். என் சினிமா வாழ்க்கை நிறைவு பெற்றது, இனி சாகும்வரை மக்கள் பணியாற்றவே விருப்பம்.

தமிழகத்தில் குப்பை அரசியல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மாற்றத்துக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் அடுத்த அரசை நாங்கள் அமைக்க முயற்சி செய்வோம். தேர்தலில் வெற்றி பெறுவதை விட சித்தாந்தமே முக்கியமானது. பணம் சம்பாதிக்க அரசியலில் இணையவில்லை. ஊழல் அரசியல்வாதிகளுக்கு இனி எந்த இடமும் இல்லை. காந்தி, பெரியார், அம்பேத்கார் ஆகிய தலைவர்கள்தான் எனது ஹீரோக்கள்”

கமல்ஹாசன் பேசிய இடமான மும்பை, பாஜக ஆளும் மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending