ஆந்திரா, தெலங்கானாவில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது.
வங்கிகள் திவாலானால் வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் வைப்பு நிதியைக் கொண்டு அவற்றை நெருக்கடியில் இருந்து மீட்க வகை செய்யும் நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு மசோதா குறித்த வதந்தியே இத்தகைய நெருக்கடிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
சேமிப்பு மற்றும் வைப்பு நிதிக்கு ஆபத்து வரப் போவதாக பரவிய வதந்தியால், வங்கிகளில் இருந்த அனைத்து பணத்தையும் வாடிக்கையாளர்கள் மொத்தமாக எடுக்கத் தொடங்கினர்.
அத்துடன், இரண்டு மாநிலங் களுக்கும் ரிசர்வ் வங்கி உரிய ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யவில்லை என்றும் மாநில அரசுகளின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால், பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப்பட்டிருப்பதுடன், வங்கிகளிலும் பணம் எடுக்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.