சென்னை: கருணாநிதி உடல் நிலை குறித்து அடுத்த அறிவிப்பு இரவு 11 மணிக்கு வெளியாகிறது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று மாலை 4 மணி அளவில் கருணாநிதிக்கு உடல் நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல் நிலையை கவனித்து வந்த மருத்துவர்கள், உடனே சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவரது உடல் மருந்துகளை ஏற்கும் நிலையில் இல்லை என்று கூறப்பட்டது. இதனால் மாலை 6.30க்கு காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் முதுமை காரணமாக மருந்துகளை ஏற்கும் பக்குவத்துக்கு கருணாநிதியின் உடல் நிலை இல்லை என்றும், இன்னும் தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரம் கழித்தே எதுவும் சொல்ல முடியும் என்றும் கூறப்பட்டது.
காவேரி மருத்துவமனையின் இதுவரையிலான அறிக்கைகளில், இந்த அளவுக்கு நெகட்டிவ்வான வார்த்தைகளுடன் அறிக்கை வந்ததில்லை என்பதால், தொண்டர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் அடுத்த அறிவிப்பு இரவு 11 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதில் கருணாநிதியின் உடல் நிலை குறித்த முழு அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.





