கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், சென்னையில் தொண்டர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர்.
கருணாநிதியின் குடும்பத்தினர் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து கருணாநிதி சிகிச்சைப்பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு பாடலாசிரியர் வைரமுத்து வந்தார்.தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வருவதால் தொண்டர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்ற்னார். முக்கிய தலைவர்கள் தொடர்ந்து வருவதால் தொண்டர்களும் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர். காவேரி மருத்துவமனையின் அறிக்கையை தொடர்ந்து திமுக தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளது.
கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.
கருணாநிதியின் உடல் நிலை சவாலான நிலைக்கு சென்றுவிட்டது எம திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை…






