சென்னை: அண்ணா பல்கலை., விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு பற்றிய அறிக்கையை அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
இதை அடுத்து, அண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் மறு மதிப்பீட்டில் நடைபெற்ற ஊழல் குறித்த விசாரணை சூடுபிடித்துள்ளது.
விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்தது என்ன என்று துணைவேந்தர் அறிக்கை தர ஆணையிட்டுள்ளார் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித். ஆளுநரின் உத்தரவை அடுத்து அண்ணா பல்கலைக்கழக தனிக்குழு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.




