சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கிராமப் புறங்களில் நிறுத்தப் படும் பஸ்களை டிப்போக்களுக்குத் திருப்புமாறு பணிமனை மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை மற்றும் மற்ற இடங்களின் ஊரகப் பகுதிகளில் இரவு நேரத்தில் தங்கும் பஸ்களை அங்கிருந்து உடனடியாக டிப்போக்களுக்கே ஓட்டி வருமாறு பணிமனைகளின் மேலாளர்கள் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு மாலை 6 மணி அளவில் கட்டளை இட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் பஸ்களை கிராமப் பகுதிகளில் ஓட்டிச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாளை ஏற்கெனவே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். மத்திய அரசின் புதிய போக்குவரத்து மசோதா குறித்து பேசப் படும் பேச்சுவார்த்தைகள் குறித்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.




