நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் புதிய தமிழகம் கட்சியின் மகளிரணி முதல் மாநில மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டை அக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில், தேவேந்திரகுல வேளாளர்களைப் வாக்காளர்களைப் பட்டியல் பிரிவிலிருந்து விலக்கி இதரப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட வேண்டும்.
அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை
நிறைவேற்றப்படவில்லையெனில் புதிய தமிழகம் கட்சியால் அறிவிக்கப்படுகிற
மாநிலந்தழுவிய போராட்டத்தில், அனைத்துக் கிராமங்களின் சார்பாகப் பெண்கள் கலந்து கொள்வது,
வேளாண்மை தொழிலில் நேரடியாக ஈடுபடக்கூடிய தேவேந்திர
மேம்பாடு, தொழில் மேம்பாடு. திறன் மேம்பாட்டுக்காகத் அவர்களுடைய பொருளாதார வேளாளர் மகளிர் மேம்பாட்டு நிதி ஆணையம் அமைத்துத் தந்திட மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்தப்படுவது,
கடந்த 50 ஆண்டு காலமாக தமிழத்தில் திராவிட கட்சிகள் நம்மை வாக்குவங்கிகளாக மட்டுமே இதுவரை பயன்படுத்திக் கொண்டார்கள். இனி வரக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில், தமிழக மக்களின் வாழ்வில் ஒளியூட்டவும், ஒட்டுமொத்த தமிழர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், புதிய தமிழகம் கட்சியின் தலைமையில் ஒரு வலுவான அணியை உருவாக்கவும் அந்த அணியை ஆட்சி
அதிகாரத்தில் அமர்த்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் புதிய தமிழகம் மகளிரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மகளிரணியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.






