பீகார்: மாஞ்சி நீக்கம்; நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகத் தேர்வு

இந்தியா

nithish-kumarபாட்னா: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சரத் யாதவ்வுக்கும், அம்மாநில முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, அங்கே அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், மாஞ்சி நீக்கப்பட்டு, மீண்டும் முதல்வராக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. பீகாரில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று மாலை நடந்தது. இதில், முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, நிதிஷ்குமார் சட்டசபைத் தலைவராக (முதல்வராக) தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பீகாரில் ஐக்கிய ஜனதா தளக் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். முதல்வராக ஜிதன் ராம் மாஞ்சியை அவர் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.