ஆதார் – பான் எண் இணைப்பு மார்ச் 31 வரை நீட்டிப்பு!

இந்தியா சற்றுமுன் வணிகம்

01 June30 aadhar card pan card - 2026

ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீடிக்கப் பட்டுள்ளது.

வருமான வரித் துறையின் பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், மீண்டும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது அரசு. இதற்கான கால அவகாசம், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நிரந்தரக் கணக்கு எண் – பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியிருந்தது மத்திய அரசு.  வருமான வரி தாக்கலின் போதும் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இதை அடுத்து கடந்த ஓர் ஆண்டாக நீட்டிக்கப்பட்டுவந்த கால அவகாசம், நேற்றுடன் முடிவடைந்தது.

இந் நிலையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க 2019ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.