கூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு!

Published:

01 Oct17 dhin sabari malai e1539780766410 - 2026

பத்தனம்திட்டை: கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சேர்ந்து வரும் சபரிமையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும், இந்தத் தடை உத்தரவு இன்று இரவு முதல் அமலுக்கு வருவதாகவும் பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்கு தரிசனத்துக்கு வரத் தொடங்கி உள்ளனர். அவ்வாறு வரும் ஒருசிலரையும், பக்தர்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆனால், அவர்களை தடுத்து போலீஸார் பெண் பக்தர்களை சபரிமலை நோக்கி அனுப்பி வைக்கின்றனர். இதனால் பெரும் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனால் கல்லெறி சம்பவங்களும் அங்கங்கே தடியடியும் நடத்தப் பட்டன. வன்முறை வெடித்ததால், பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img